உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

231

படுவதுபோலத் துணித்து எடுப்பதால் ‘துணி’ எனப்படுகிறது. துண்டிக்கப்படுபவை துண்டு, துண்டம் எனப்படுவதும் கருதுக.

துணிக்கப்பட்டது துணியாவதுபோல், துணித்து வந்தது துணிவு’ எனப்படுகிறது. மக்கள் பல்லாயிரவர் ஒருங்கு திரண்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் நாம் துணிவினர் என்பது இல்லை. ஒருவர் இருவரையே துணிவினர் என்கிறோம்; பாராட்டுகிறோம்: சிறப்பிக்கிறோம். ஏன்?

நடக்கக்கூடாத கொடுமை அல்லது தீமை நடக்கின்றது. அதைக் கூட்டமெல்லாம் கூடிக்கூடிப் பேசுகின்றது. ஆனால், அதனைத் தடுக்கும் துணிவு அவரெல்லார்க்கும் வந்து விடுவ தில்லை! எவரோ ஒருவர் அக்கூட்டத்தை விடுத்துத் துணிந்து (துண்டுபட்டு) செல்கிறார்; தட்டிக் கேட்கிறார். தடுத்து நிறுத்து கிறார்! அவரைத் துணிவானவர்’ என்று கூட்டமே சொல்கின்றது! தம்மில் இருந்து துணிந்துபோய்த் தாம் செய்ய முடியாததைச் செய்பவர் எவரோ, அவரைத் துணிவினர் என்பதும், அவர் தன்மையைத் ‘துணிவு' என்பதும் தக்கவை தாமே!

கோடி கோடிப்பேர்கள் இருந்தாலும் ஆங்கிலவரை எதிர்த்துக் கப்பலோட்டுதற்குக் கிளர்ந்தவர். இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதற்கண் தனி ஒருவராகக் கிளர்ந்தவர் - வ. உ. சிதம்பரனாரே! அவர், கூட்டத்தோடு கூட்டமாக அமைந்து விடவில்லை! கூட்டத்தைத் துணிந்து வெளிப்பட்டார்! துணிவாளர்; எனப்பட்டார்.

நக்கீரத் தன்மை எத்துணைப் பேர்க்கு வாய்க்கும்! தமிழ்ச் சங்கப் பேரவையில் ‘குற்றம் குற்றமே' என்று துணிந்துகூற அவர் ஒருவர் தாமே முன் வந்தார்! பின்னை புனைவுச் செய்தியே ஆயினும், துணிவுச் சான்றாக அன்றோ நிலைபெறுகின்றது! கூட்டத்தோடு கூட்டமாக நின்றுவிடாத தனித்தன்மையே துணிவு’ என்பதை அதன் முதனிலை செவ்விதாகச் சொல்கின்றதே!

ஒருவர் துணிந்து சொல்ல அல்லது செய்ய முற்பட்டு விட்டாரா? அவரைத் தொடர்ந்து ஒருவர் ஒருவர் இருவரெனத் துணிந்து வருதல் கண்கூடு! முதற்றுணிவர் தலைவராகி விடுவார்! வழிந்துணிவர் துணிவுக்குழுவராகி விடுவார்: கிளர்ச்சி, புரட்சி, எழுச்சி என்பவற்றின் ‘மூலவர்’ ஒரு துணிவர் தாமே! அத்துணிவர்க்கு மூலம் ‘துணி’ தானே!