உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. வண்ணமும் எண்ணமும்

‘வண்ணம்’ பாடுதலில் சிறந்த ஒருவர் வண்ணச் சரபம் என வழங்கப்பட்டார். அவர் தண்டபாணி அடிகள். இன்னொரு புலவர் 'வண்ணக்களஞ்சியம்' என வழங்கப் பட்டார்.

இவர்கள் கடந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள். வண்ணம் பாடுதலில் இணையற்று விளங்கிய ஒருவர் அருணகிரியார், அவர் நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.

கம்பர் பாடிய வண்ணம் தொண்ணூற்றாறு என்பர். வண்ணத்தின் தனிச் சிறப்பு ஒலியொப்பு: மற்றொன்று அள வொப்பு!

வண்ணத்தின் வரவு இவர்கள் காலத்தது அன்று! காரிகை, கலம் ஆகியவை காலத்ததன்று; தொல்காப்பியர் காலத்திற்கும் முற்பட்ட வரவினது.

தா ல்காப்பியர் தழிழ்வண்ணங்களை இருபதெனத் தெளிவாக வகுத்துக் காட்டி இலக்கணமும் தந்தார். அவர்க்கு முற்படவே அவ்வண்ணம் உண்டு என்பதையும் செவ்வண்ணம் சுட்டினார், அவ்வண்ணங்களுள் இரண்டு: வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம் என்பன.

வல்லெழுத்து மெல்லெழுத்து மல்லெழுத்து என்பன உயிர்மெய் யெழுத்தை அல்லவாம். அல்லவாம். மெய்யெழுத்தை அல்லது ஒற் றெழுத்தை என்க,

மெய்யெழுத்தை

‘அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை மாதர்கொல் மாலுமென் நெஞ்சு”.

இப்பாடல் முப்பாலில் மூன்றாம்பாலின் முதற்பாடல். தலைவியைக் கண்ட தலைவன் ஐயுற்று எண்ணுகின்ற மயக்க மனநிலை. அதற்கு ஏற்ப மூன்று இடைவெளியாக மூன்றசை நிலைகள் (கொல்). வல்லொற்று ஒன்றும் வாராமையுடன் மெல்லொற்று மிகவுடைமை; அணங்கு: கணங்குழை; என் ; நெஞ்சு.

ன்