உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – சொல்

233

இப்பாடலுக்கு அடுத்தது. அவன் பார்த்தான்; அவளும் பார்த்தாள்! இருவரும் பார்த்த பார்வை போராட்டமாயின. போராட்டத் தாக்குதல் பாட்டின் எழுத்திலேயே படிந்து கிடக்கப் படிப்பார் அறியப் பாடுகிறார் வள்ளுவர்.

“நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைகொண் டன்ன துடைத்து”

எத்தனை வல்லொற்று; மூன்று நோக்கு; ஒரு தாக்கு; உடைத்து;

முதற் பாடலுக்கும் அடுத்த பாடலுக்கும் ஏன் இந்த ஒலி வேறுபாடு? 'எண்ண வேறுபாடு' என்பதை வண்ண வேறுபாடாகக் காட்டுகிற உத்தியன்றோ இது!

பொருளறிந்து - உணர்வறிந்து - சொல்லின் ஒலி வடிவு காட்டுதல் தேர்ந்த புலவர்க்கெல்லாம் நேர்ந்த வழக்கு ஆனால் பொது மக்கள் வழக்கு? புலவர் வழக்குக்குக் கொடைஞர் பொதுமக்களே என்பதை எண்ணுவார் எவரும் திண்ணமாய் அறிவர். நாட்டுப்பாடல்களிலே காண முடியா உணர்வும் சுவையுமோ ஏட்டுப்புலவர்களிடம் இருந்தன?

பாட்டிலே வண்ணமென்ன வண்ணம்? முறையுரிமைப் பெயரிலேயே வண்ணம் காட்டி வனப்புத் தீட்டியதைப் பெற்றோர் பெயரே காட்டி நிற்கின்றனவே!

அம்மை' “அம்மா' ‘அம்மே' ‘அம்மோ’

என்பவை இயல் வடிவும் விளிவடிவுமாய் வழங்கும் தாயின் பெயர். ஈதொன்று தானா?

'அன்னை' ‘அன்னா ‘அன்னே' 'அன்னோ'

'அஞ்ஞை' ‘அஞ்ஞை' 'அஞ்ஞே' 'அஞ்ஞோ'

என்பனவும் தாய்க்குரிய இயல் வடிவும் விளிவடிவுமாக வழங்கும் பெயர்கள். அஞ்ஞை இந்நாள் வழக்கென

எண்ணம்

வருகிறதா? ‘அஞ்ஞை, நீ, ஏங்கி அழல்' என்பது சிலப்பதிகாரம். ‘தந்தை’க்கு வழங்கும் பெயர்கள்:

அப்பன் (ர்)' ‘அப்பா’ ‘அப்பே’ ‘அப்போ’

“அச்சன்' ‘அச்சா' 'அச்சே; அச்சோ'

‘அத்தன்” ‘அத்தா' 'அத்தே' அத்தோ'