உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

இளங்குமரனார் தமிழ்வளம்

15

இவை தந்தைக்கு இயல்வடிவும் விளிவடிவுமாய் வழங்கும் பெயர்கள். இப் பெயர்களுள் சில அருகிய வழக்கின. இலக்கிய ஆட்சியில் மட்டும் உள்ளனவும் உள. ஆயின், நம் ஆய்வுக்கு அருகிய வழக்கும் பெருகிய வழக்கும் தடையாவதில்லை. அச்சன்...அச்சோ' தமிழ் வழக்கா என ஐயமா? மாணிக்கவாசகர் அச் சோப் பதிகம் சான்றில்லையா?

முன்னவை மூன்றும் அம்மையைப் பற்றியவை: மெல்லி னத்தியல்பவை.

பின்னவை மூன்றும் அப்பனைப் பற்றியவை: வல்லினத்

தியல்பவை.

அம்மை அப்பனை இப்படித் திட்டமிட்டு வைத்தாற் போல் மெல்லினமாகவும், வல்லினமாகவும் அமைப்பானேன்? பெண்மை ஆண்மை இயல்களை ஒலியலகால் வண்ண வகையால் - சொல்ல எண்ணம் கிளர்ந்த தெனலாமோ?