உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

57. முறைப் பெயர்

“தமிழில் எத்தனை பரம்பரைகளுக்கு முறைப்பெயர்கள் உண்டு' என்று ஓரன்பர் வினவினார். அவர் பன்மொழிப் புலமையாளர்;பட்டறிவும் வாய்ந்தவர்; புதியன கண்டு போற்றுதலில் பூரிப்பவர்; அவர் வினாவுதல் மகிழ்வு தந்தது. ஆனால், யான் அதற்கு நேர்விடை கூறாமல் ‘வினாஎதிர் வினா’ என்னும் முறைப்படி, ‘ஆங்கிலத்தில் எத்தனை பரம்பரைகளுக்கு முறைப் பெயர் வழங்குகின்றது” என்றேன்.

66

“தந்தை, மகன், தாய், மகள் என்று இரு பரம்பரைக்கே உண்டு. அதற்கு முன்பின் உள்ள பரம்பரைக்கு அவற்றின் ஒட்டுப் பெயர்களே உண்டு. தனிப்பெயர் இல்லை” என்றார்.

“நன்றி; மகிழ்ச்சி” என்று கூறிய யான், “தமிழில் எத்தனை பரம்பரைக்கு முறைப்பெயர் உண்டு என்பது நீங்கள் அறிந்தது தானே! அவை மிகுதியானவை அல்லவா?" என்றேன்.

66

‘ஆம்! ஐந்து பரம்பரைக்கு உண்டு என்று நினைக்கிறேன்” என்று கூறிய அவர் அவற்றைச் சுட்டினார். "இவ்வளவு தானா? இன்னும் உண்டா” என்றார் மீண்டும்!

"ஒன்பது பரம்பரைக்குத் தமிழில் முறைப்பெயர் உண்டு” என்று யான் கூறவும் அவர், தம் கண்களை அகல விரித்து வியப்புடன் தம் கையைத் தலைமேல் வைத்துக் கொண்டு “ஓ! கடவுளே அவ்வளவு சொற்கள் உண்டா?" என்றார்.

அதன் பின்னே தமிழிலுள்ள முறைப்பெயர்களைப் பற்றி உரையாடினோம். அவருக்கு வியப்பான செய்திகள் பல எனக்குப் புதியதோர் ஆய்வுத் தலைப்பாட்டு வாய்ப்பு! “எந்த ஒரு தூண்டலும் துலக்கத்திற்கு உண்டாவனவே” என்னும் கடைப் பிடியைக் கொண்டால் ஆய்வுத் துறைகள் புதிது புதிதாக வந்துகொண்டே இருத்தல் உறுதியாம்; உண்மையுமாம்!

முறைப்பெயர் ஆய்வு பழமையானது. ஆசிரியர் தொல் காப்பியனார் முறைப்பெயரை நன்கு ஆய்கிறார். அது விளி யேற்கும் முறையே விரித்துரைக்கிறார். முறைப் பெயர்க்கு வரும்