உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

இளங்குமரனார் தமிழ்வளம்

15

எழுத்துகளையும் இயம்புகின்றார். முறைப் பெயர் என்பதற்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கம் அருமையானது. 'பிறப்பு முறைபற்றிய பெயரே முறைப் பெயர்” என்பது அவர்கள் தரும் விளக்கமாம். பிறப்பு முறையால் தானே தாய், தந்தை, மகன், மகள், பேரன், பேர்த்தி என்பனவெல்லாம் இயல்கின்றன.

66

முறைப்பெயர்கள் தன்மை முன்னிலை படர்க்கை ஆகிய மூவிடங்களில் ஏற்ப வேறுபடுதல் தனிச்சிறப்புக்கு உரியதாம். என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் யார் யாரோ?” என்னும் பொருளமைய குறுந் தொகைப் பாட்டொன்று வருகின்றது. அது,

"யாயும் ஞாயும் யாரா கியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?”

என்பது. இதில் யாய், ஞாய்; எந்தை, நுந்தை எனத் தன்மை முன்னிலை இடங்களுக்கு ஏற்ப முறைப்பெயர் வருதலை அறிகின்றோம். ஆனால், தொல், சொல், உரையாசிரியர் தெய்வச் சிலையார் மூவிடங்களிலும் வரும் முறைப் பெயர்களை விளக்குகிறார்.

66

“தந்தை, நுந்தை, எந்தை எனவும்,

தாய், ஞாய், யாய் எனவும்

தம்முன், நும்முன், எம்முன் எனவும்,

தம்பி, நும்பி, எம்பி எனவும் முதல்வனையும் ஈன்றாளையும் முன் பிறந்தானையும் உணர்த்தும் பன்மைச் சொற்களெல்லாம் பொருண் முகத்தால் தம்மையும் பிறரையும் உணர்த்துவான்’ என்கிறார்.

முறை என்பது பிறப்பொடு வந்த முறைமையல்லவோ? அதனால் உற்றார் உறவினரை 'முறை' வைத்துக் கூப்பிடுவர் அதனை முறைமையாகப் போற்றுவர். முறையாவது நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு, நடைமுறை என்னும் பொருள்களை யெல்லாம் தரும் சொல். ‘முறை மாப்பிள்ளை' ‘முறைப் பெண்' என்பவை இன்றும் உள்ளவையே. முறை கேடாக நடப்பவர் முறைகேடர் எனப்படுவார். முறை தவறிப் பார்த்தாலும், முறைத்துப் பேசுவராகவும் இகழப்படும். முறைகேடு நடந்து விட்டால் ‘முறையோ?' என்று ‘முறையீடு செய்வதும் வழக்கம். 'முறை செய்து காப்பவனே இறை' என்பது அறமுறை! இப்படி