உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அக்கப்போர்

அக்கப்போர் என்பது இந்நாள் பொது மக்கள் வழக்குச் சொல்; கல்வியறிவு அறவே இல்லாத பொதுமக்களிடத்துத் தோன்றிக் கற்றோர் முதல் அனைவரிடத்தும் ஊன்றியுள்ள சொல்.

“உன்னோடு எப்போதும் அக்கப்போராக இருக்கிறது; உன்னோடு அக்கப்போர் செய்ய நம்மால் ஆகாது; ஓயாமல் ஒழியாமல் அக்கப் போர் பண்ணுபவனோடு என்ன செய்வது? நின்றாலும் குற்றம்; நடந்தாலும் குற்றம்; அவனோடு ஒரே அக்கப்போர்." இப்படி நாளும் பொழுதும் எங்கும் எவரிடமும் கேட்கும் சொல் அக்கப்போர்! இவ்வக்கப் போர்க்குப் பொருள் காண வழக்கியலை நோக்குதல் வேண்டும்., கண்டு பிடிக்க அரியதும் ஆழமிக்கதுமான தேடல் வேண்டியது இல்லை. பொது மக்கள் வழக்கில் பொருந்தி வழங்கும் சொற்கள் இயல்பானவை; எளிமையானவை; நேரே பொருள் தருபவை. மயக்குதல் அற்றவை; பகட்டு அற்றவை. இந்நோக்கில் அக்கப் போரைத் தேடிப் பொருள் காண வேண்டும்.

அக்கப்போர் என்னும் சொல்லை, தனக்கே உரிய பெரு வழக்கம் போல் வடசொல்லாகக் வடசொல்லாகக் காட்டுகிறது ‘தமிழ் லெக்சிகன்’, தமிழ் அகராதியின் பெயர்வரவே அதன் பொருள் வரவைக் காட்டப் போதுமே! அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது எவ்வளவு பட்டறிவினின்று வெளிப்பட்ட சொல்! அவ்வகராதி சொல்கிறது:

அக்கப்போர் 1 - கலகம், உபத்திரவம் அக்கப்போர் 2- வம்புப்பேச்சு

ஆனந்த விகடன் அகராதிசொல்கிறது:

கலகம், உபத்திரவம், வம்புப் பேச்சு, அலப்புதல், வருத்தம். செந்தமிழ்ச் சொற்பிறப்புப் பேரகர முதலிவிளக்குகிறது: