உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

1. கலகம் (கொ. வ) 2. தொந்தரவு, தொல்லை

(கொ. வ) ம. அக்கப்போரு

=

9

(ஒருகா : அக்கு துண்டு, சிறியது. அக்கு+போர்- அக்குப் போர் = சிறுபோர், கலகம், தொந்தரவு. அக்குப்போர் - அக்கப் போர். இனி, அக்கு - அக்கம்+போர் -அக்கப்போர் என்றுமாம். அக்கக் காய் (துண்டு துண்டாக) அக் - குணிப் பிள்ளை (சிறு பிள்ளை) என்னும் வழக்குகளை நோக்குக).

அக்கப்போர் சிறுபோர் என்பது பொருந்துவது அன்று. போர் போரே! சிறுபோர் ஆயினும், பெரும் போராயினும் சரியே. கலகம், கைகலப்பு, சண்டை, சச்சரவு இப்படிப் பல சொற்கள் வழக்கில் ள்ளவை. பல்வேறு நிலைகளைக் கருதியவை என்க.

போர் என்பது பொரு அல்லது ஒப்பு என்பதன் வழியாக வந்த சொல். ஒத்த இருவருக்குள் ஏற்படுவதே போர், ‘பொருநர்’ என்ற சொல்லும் வீரர்க்கு ஆயது அவ்வகையால் தான். இங்கு வரும் 'போர்’ சிறுபோர் பெரும் போர் எனப் பார்க்கத் தக்க கைகலப்பன்று. இந்நாளில் மறுத்துப் பேசுதலைச் ‘சொற்போர், என்பது இல்லையா? அவ்வகையைச் சார்ந்த போர். மன உளைச்சலை உண்டாக்கும் பேச்சுப்போர், ஏச்சுப்போர்; கருவுதல் போர்!

என்பது

அக்கம் என்பது என்ன? "அக்கம் பக்கம்” ணைமொழி. இவற்றுள் அக்கம், தன் வீடும் தானிருக்கும் இடம் சார்ந்தது, பக்கம் தன் வீட்டுக்கு அடுத்துள்ள வீடும்' தானிருக்கும் இடத்திற்கு அடுத்துள்ள இடமும்.

அக்கம் பக்கம் பார்த்துப் பேசு'

என்பது ஈரிடங்களையும் இணைக்கம் பழமொழி. “பகலில் பக்கம் பார்த்துப் பேசு. இரவில் அதுவும் பேசாதே”

என்பது மற்றொரு பழமொழி.

பகலிலும், 'அக்கம்' பற்றிப் பேசுதல் கூடாது; பார்த்துப் பேசுதல், பாராது பேசுதல் இரண்டும் கூடாது. சுவரும் கேட்கும்; தோட்டமும் கேட்கும்: கேணியும் கேட்கும் முற்றமும்; கேட்கும்; மூலை முடுக்கும் கேட்கும்; எது எங்கிருந்து எப்படிக் கேட்கிறது