உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ்வளம்

15

என்று தெரியாமல் கேட்கும் அப்படிக் கேட்டால் என்ன விளைவாம்? “அக்கப் போராம்"!

கேட்டதை வைத்துக்கொண்டு, வீட்டுக்குள்ளே வைவது போல வெளியாருக்கு வையலாம்; சட்டிபானை, ஆடுமாடு, வேலையாள் வேற்றாள் எவரைச் சாக்கிட்டேனும் சாடை மாடை யாகப் பேசலாம்! கேட்கப் பேசலாம்; கேட்டும் கேளாமலும் பேசலாம்! இரு வீட்டார்க்கும் - “ஒட்டுக்குடி ஓரக்குடி’. ‘அண்டை அயல், என வாழும் இருசாரார்க்கும் ஓயாத் தொல்லை! ஒழியாத் தொல்லை; அரிசிறங்கு ஓய்ந்தாலும் ஓயாத அடங்காத தொல்லை! கிண்டிக் கிளறுதலைத் தாழிலாகக் கொண்ட கோழி அதனை விடுத்தாலும், தன் னத்தைச் சேர்ந்தது அடுத்த தெரு வழியில் வாலை ம மட க்கிக் கொண்டு ஓடுதலைக் கண்டு குரைத்தலை நாய் மறந்தாலும், அயர்தி மறதியால் விட்டாலும் - விடாத முணகல்! மூச்செறிவு! உருட்டல் புரட்டல்! இதைக்கண்ட ஒருவர் மனத்தை இச் செயல் வாட்டியிருக்கிறது. எந்தப் போர் இருந்தாலும் இந்தப் போர்க்கு - அக்கப் போர்க்கு இடந்தருதல் கூடாது என எண்ணியிருப்பார். அதனை ஒரு சொல்லாக்கி உலவ விட்டிருப்பார்! அந்த அக்கப் போர் அறிவாளிகளையும் அக்கப்போர்க்கு ஆளாக்கிவிட்டுக்

-

கொண்டிருக்கிறது.

“கிட்டவுறவு முட்டப்பகை” என்பதை எவர் அறியார்?

66

‘அடுத் திருந்து மாணாத செய்வான்” பகையைச் சுட்டுகிறாரே வள்ளுவர். “மடியிலே பூனையைக் கட்டிக் கொண்டு சொகினம் (சகுனம்) பார்ப்பதா?” என்கிறதே ஒரு பழமொழி! “பக்கத்துக் கடனோ னோ பழிக்கடனோ” என்கிறதே மற்றொரு பழமொழி!

66

இவையெல்லாம் “அக்கப் போர்க்கு இடந்தராதே” 'அக்கப் போரை விலைக்கு வாங்கிக் கொள்ளாதே” என்னும் எண்ணத்தின் வெளிப்பாடுகளே!

‘அக்கம், ‘க்” ஒற்றுக்கெட ‘அகம்' ஆகும்; பகுக்கப்பட்டது பகம், பாகம். பாகப் பிரிவு; அதற்கு எல்லைக் கோடு இல்லாமல், இருந்தால் ஒருவரிடமாகவே இருந்திருக்கும்.

வ்விளக்கங்கள் என்ன சொல்கின்றன; குடிவழியில் வேறொருவர் இருந்தாலும் ‘அக்கப் போர்’ குறைவாக இருக்கும். ஒரே குடும்பத்தவர் குருதிக் கலப்புடையவர் - அக்கப்போரா 'நூறாண்டு வாழ்வு; நொடி நொடியும் சாவு” என அக்கப்போர் ஆக்கும் என்பதை எச்சரிக்கிறதாம்.

66