உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கணம்

2. அங்கணம்

பேச்சு, எழுத்து என்னும் இருவகை

வழக்குகளிலும் இன்றும் வழங்கும் சொல். அங்கணக் குழி, அங்கணத் தொட்டி, அங்கணக் கிடங்கு என உலக வழக்கிலும்.

“அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்'

“ஊரங்கண நீர்”

என இலக்கிய வழக்கிலும் இடம் பெற்றுள்ளன.

(திருக். 720)

- (நாலடியார். 175)

சமையலறையில் கலங்கள் கழுவும் நீர், கை கழுவுதல், துடைத்தல் ஆகிய நீர் - வழிவதற்காக அமைக்கப்பட்ட குழி அல்லது தொட்டி அங்கணக் குழி, அங்கணத் தொட்டி எனப்படும்.

சமையற் பகுதியில் அடுப்பு உயரமும், அதில் தாழ்ந்து தளமும், அத்தளத்தில் தாழ்ந்து அங்கணக் குழியும், அக்குழியில் இருந்து வழியும் நீர் வழிந்தோடும் படி சாய்க்கடையும் அல்லது வடிகாலும் அமைக்கப்படுதல் எண்ணத் தக்கது.

அங்கணக்குழியில் கொட்டப்படும் நீர் வெளியேறுவதற்குத் துளையுண்டு; தூம்பும் உண்டு. துளை, புரை. சுரை, குழை, புழை, முழை, நுழை, வளை வ என்பவை எல்லாம் துளை என்னும் பொருள் தருவனவே.

துளைக்குக் கண் என்பது ஒரு பெயர், மான் கண் போலத் துளையமைத்துக் ‘காற்றுப் புகுவாய்' அமைத்தனர் முந்தையோர். அது ‘மான்கண் காலதர்’ எனப்பட்டது. கால் அதர் = காற்று வழி; 'கண்விடு தூம்பு' என்பதோர் இசைக்கருவி.

‘கண்' என்பதால் அமைந்த பெயருடையது ‘கண் வாய்.' கண்ணே நீர் வழியும் வாயாக அமைக்கப்படுதலால் கண்வாய் எனப்பட்டது. அதுவே இந்நாள் ‘கம்மாய்' என வழங்குகின்றது. ‘மான்கண்’ ‘புலிக்கண் ‘நாழிக் கண் ‘துடுப்புக்கண். என அக் கண்கள் அமைக்கப்பெற்றுள்ளமை காணக்கூடியவே.