உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ்வளம்

15

அங்கணக் குழியில் இருந்து நீர் செல்வதற்குக் 'கண்' அல்லது துளை அமைக்கப்படுவது தெளிவான செய்தி. அக் கண் வெளியே புலப்பட அமைந்ததா? குழியினுள் மறைவாய் அமைந்ததா எனின், அதன் அகத்தே மறைவாக அமைக்கப் பட்டதேயாம். அகத்தே உள்ளே; அகம் என்பது 'அம், எனத் ெ தொகுத்து வருதல் பெருவழக்கு. அகம்+கை=அங்கை; அகம்+ செவி== அஞ்செவி.

இவற்றின் இலக்கணத்தை,

“அகமுனர்ச் செவிகை வரின் இடையனகெடும்”

என்கிறது நன்னூல்.

அகம் என்னும் சொல்லின் முன் செவி என்னும் சொல்லோ கை என்னுஞ் சொல்லோ வருமாயின். அகம் என்பதில் உள்ள க' என்னும் எழுத்து மறைந்துவிடும்; ‘அம்' என நின்று செவியோடு அம்+செவி=அஞ்செவி என்றும், அம்+கை=அங்கை என்றும் சேரும் என்பது இந்நூற்பாவின் விளக்கம். (அங்கை, வழக்கில் உள்ளங்கை என வழங்குதலும் அறிக)

இவ்விதியொடு சேரத்தக்க ஒரு சொல் ‘கண்’ என்பது அகம்+கண்=அங்கண். உள்ளிடத்தே அமைந்த கண் அகங்கண் அங்கண்), என்னும் ஒட்டினைச் சேர்த்து அகங்கண் அம் (அங்கணம்) ஆயிற்று என்க.

உள்ளிடத்தே கண்ணைக் கொண்ட குழி எனப் பிற

வற்றையும் ஒட்டிக்கொள்க.

இதனை வேறு வகையாகப் பிரித்துக் காட்டுவார்.

66

"அங்கு+அணம்=அங்கணம்

வங்கு>அங்கு. அங்குதல்

=

சாய்தல். வளைதல்.

கழிவு நீர் செல்லும் சாய்க்கடை வாட்டம் சாய்வாய் ருப்பதால் அங்கணம் எனப்பட்டது” என்பர்.

அகம் கண் அம் என்னும் இருசொல் ஒட்டு ஒரு சொல் தன்மைப்பட்டு நிற்பதே அங்கணம். இப்படிப் பல சொற்கள் ஒரு சொல்லாய் நிற்குமோ என அறிந்தோர் ஐயுறார்; 'அரிவாள் மணை' முச்சொற் கூட்டு ஒரு சொல். ஒட்டு இல்லாத முழுமுழுச் சொற்கள் அவை. அரிதல் சிறிதாய் (அறுத்தல்); அரிதற்கு வாள்; அவ்வாள் அமைதற்குரிய மணை (பலகை); இம்மூன்று உறுப்புகளும் உண்மை காண்க.