உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

13

முகம் வாய் என்பவை ஒரு முதலும் ஒருறுப்புமாம் பெயர்களைச் சுட்டுவன; இரண்டும் சேர்ந்து ‘முகவாய்' என ஒரு சொல் தன்மையாயும் அமையும், வாய்க்குக் கீழேயுள்ள நாடியைக் குறிக்கும் போது ‘முகவாய்க் கட்டை' என முச்சொற் கூட்டாகும், முகத்தில் வாய்; வாயின் கட்டை; இவை ஒன்றின் பகுதி ஒன்றாய் அதன் பகுதி ஒன்றாய்க் குறித்தலை அறிக. அதன் கொச்சை வடிவு 'முகரக் கட்டை’ என்று வழங்குதலை எவரே அறியார். ஆதலால், 'அகம் கண் அம்' எனப் பல சொல் இணைந்து ஒரு சொல் ஆகுமோ என ஐயுறவு வேண்டியதில்லை என்க.

--