உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

15

இங்கே அட்டக்கரியைப் பற்றியதே ஆய்வு ஆகலின் ‘கருப்பு' ஆய்வு தனியே கொள்ளலாம்.

அட்டம் என்னும் சொல்லுக்குப் பொருள் தெளிவாகி விட்டால் கரி, கறுப்புக்கவலையில்லை. அட்டம் என்பதற்குக் கூறிய, மிக, மிக்க' என்ற பொருள்கள் சரியானவையே. ஆயினும் எப்படி அப்பொருள் தந்த தென்ற குறிப்பு இல்லை.

அண்டங்காக்கையை ‘அட்டக் காக்கை' என்றாலும் அதே சிக்கல்தான். வேற்று மொழி, ஒப்பும், வழக்கொப்பேயன்றிப் பொருள் விளக்க ஒப்பு இல்லையாம்.

அட்டம்' என்றொரு பொருள் உண்டு, அவ்வாறே கிட்டம்' என்றொரு பொருளும் உண்டு. அவற்றை அறிதல் விளக்கத்திற்கு ஒளி தருபவை.

ஒளியைத் தேடித்தானே போகவேண்டும்; கொல்லர் உலைக்களத்தில் கரியை உலையில் போட்டு வேகவைத்து அவ்வேக்காட்டில் இரும்பை வெதுப்புதல் எவரும் அறிந்தது. எரிந்து இறுகிப்போன கரி இறுகி அடர்ப்புற்று இரும்பெனச் செறிந்து கட்டியாகும். அதற்குக் 'கிட்டம்' என்பது பெயர் ஒப்புமையால், ‘என்ன இது இரும்புக் கிட்டமாக இருக்கிறது’ என உடைபடாப் பொருளைக் கூறுவது வழக்கு. கரியால் ஓடும் தொடர்வண்டியிலிருந்து எரிபொருளைத் தள்ளுங்கால் ஆங்கும் கிட்டம் காணலாம். கிட்டம் நிற்க, அட்டம் காண்போம்.

ம்

விறகு எரு முதலியவற்றால் எரியும் அடுப்பில் வைக்கப் பட்ட சமையல் கலங்கள், அக்கரிப் புகையால் கறுத்துப் போகும். அட்டபுகை அப்பிப் பற்றிக் கொள்ளும். கலத்தின் வண்ணம், எவ்வண்ணம் ஆயினும் கருவண்ணமாக்கிவிடும். பற்றிப் பிடிக்கும் அக்கரி, புறத்தே என்றால் உள்ளேயும் பற்றிப் பிடிக்கும் பொருளும் உண்டு. அதனால் ‘பற்றுத் தேய்த்தல்' என்பது ஒரு தொழிலாய் ஒரு பிழைப்பாய் - அமைந்து விட்டது. அட்டதால் அமைந்த கரிப்பற்று என்னும் பொருள்களும் கிளர்ந்தன.

-

அடுகலத்து ஏற்படும் கரியே அட்டக்கரி; அக்கறுப்பே அட்டக்கறுப்பு எனப்படலாயிற்று. “சோற்றுப்பானை போல நிறம்” “கறிச்சட்டி போல நிறம்” என்பவை வழங்கு மொழிகள்.

ஒரு நாய், பன்றி வேட்டைக்குப் போனதாம்; பன்றி ஒன்றைக்கண்டு நாய் நெருங்கியதாம்; துணிவு மிக்க பன்றி