உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ்வளம்

15

நாயைப் புரட்டிப்புரட்டிப் படாப்பாடு படுத்திவிட்டதாம்! அதனால் வேட்டைக் களத்தில் இருந்து வீட்டுக்கு வந்த நாய், கழுவுவதற்காக வைக்கப்பட்டிருந்த சோற்றுப் பானையைக் கண்டதும் தன்னைக் காட்டில் வெருட்டிய பன்றியே வீட்டில் நிற்பதாக எண்ணி ஆங்கிருந்து ஓட்டம் பிடித்ததாம். இக் கதையை உட்கொண்டு வழங்குகின்றது ஒரு பழமொழி.

"பன்றி வேட்டையில் பயந்து வந்த நாய், சோற்றுப் பானையைக் கண்டு ஓட்டமெடுத்ததாம்” என்பது அது.

இப்பழமொழியும் அட்டத்தைச் சுட்டுதல் அறிக. அட்டம் கரி அட்டக்கரி.

அட்டம்+கறுப்பு=அட்டக்கறுப்பு.

இறுக்கப் பற்றிக்கொள்ளுதல் ‘அட்டம்' எனப்பட்ட பின்னே அந்நிலை அட்டு' எனப்படலாயிற்று. 'அட்டுப் பிடித்தவன்' தலையெல்லாம் அட்டுப்பிடித்துக் கிடக்கிறது. என வழக்குகள் வந்தன. அழுக்குப் பிடித்துக் கிடத்தல்' அழுக்குப் பிடித்தலால் தலையில் சிக்குப் பிடித்தல் சடையாதல் இவை யெல்லாம் ‘பற்றாலும் பாசத்தாலும்’ விளைவன அல்லவா! அட்டுக்குள்ள ஒட்டுறவை இனி அகர முதலிகளில் ஏற்ற வேண்டும்.