உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அட்டகாசம்

ஒரே அட்டகாசமாக இருக்கிறது” என்று பாராட்டுகிறோம். அவர் அருமையாக உடுத்தும். அருமையாக ஒப்பனை செய்தும் பொலிவோடு காட்சி வழங்குகிறார்; அவரைப் பார்த்து, "ஒரே அட்டகாசம் போங்கள்" என்கிறோம். சிலர் வீடு தோட்டச் சூழல் ஆகியவற்றைப் பார்த்த அளவில் அட்டகாசமான வீடு என்கிறோம். இந்த அட்டகாசம் என்பதன் பொருளென்ன?

சிலர் சிரிக்கும்போது பெருஞ்சிரிப்புச் சிரித்தலுண்டு. குறுநகை, அளவே நகை பெருநகை என முந்நகைப் படுத்திக் கூறுவர் பழைய உரையாசிரியர்கள். குறுகச் சிரித்தல் அளவே சிரித்தல், பெருகச் சிரித்தல் என்பவை அவை. நகை என்பதற்கே ஒளிப்பொருள் உண்டு. பல மலைகளையும் பார்த்துத் தன் எடுப்பாலும் வளத்தாலும், வனப்பாலும், ஒளியாலும்

நகைக்கின்றதாம் பனிமலை. அதனால்

“பன்னகமும் நகுவெள்ளிப் பனிவரை”

என்றார் கல்வியில் பெரியவர். பொன்னகைக்கும் புன்னகைக்கும் பொருந்திய ஒற்றுமை இருப்பதை நம் நாடு உலகுக்குப் பறையறைந்து கொண்டுதானே உள்ளது!

அட்டகாசம்' என்பதற்குப் பெருநகை எனப்பொருள் தருகின்றன அகர முதலிகள். பொலிவு, பெருநகை ஆகிய இவற்றை ‘அட்டகாசம்' என்னும் சொல் எப்படித் தருகிறது?

“அட்டாலும் பால் சுவையில் குன்றாது, சுட்டாலும் சங்கு ஒளியில் குன்றாது” என்பவை ஔவையார் உரை. அடுதலும் சுடுதலும் ஒருவினை இரு சொற்களே. சுண்டக் காய்ச்சப்பட்ட பாலில் சுவையேறவே செய்யும்! சங்கு சுட்டால் வெண்மை மிகுவது சிப்பிச் சுண்ணாம்பைப் பார்த்தாலே புலப்படும். வெள்ளையடிப்புக்கென அதனைத் தேடிப்போய் வாங்குவது அதன் இணையிலா வெண்மைக்கே தான்! சுட்ட சிப்பிக்கு சங்குக்கு எவ்வளவு வெண்மை! சுட்டது கருக்கும், கரியாகும். இது வெளுக்கிறது; மேலும் வெளுக்கிறது.

-