உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இளங்குமரனார் தமிழ்வளம் 15

இப்படியே சுட்டால் ஒளிமிகுவதும் ஒன்றுண்மை அனை வரும் அறிந்ததே. அது தங்கம்; சுடச்சுட அதற்கு ஒளிமிகும். அதனால் திருவள்ளுவர். “சுடச்சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு” என்றார்.

பொன் சுடச்சுட ஒளிவிடும்; மாந்தர் துன்பம் சுடச்சுட ஒளிவிடுவர் என்பதாம்.

சுட்டு உருக நிற்கும் பொன்னைப் பார்த்தால், அதன் பொலிவு, புலப்படும். பொன்னில் சிறந்த பொன் - ஆணிப் பொன். கலப்பற்ற தூய பொன் - ஆணிப் பொன். கலப்பற்ற தூய பொன் என்பதற்குச் சான்றாக உரையாணியிட்ட பொன்னே ஆணிப் பொன். ஓட விட்ட பொன் என்பதும் வழக்கு. ஓடவிடுதல் என்பது நீராக உருகி ஓடவிடல் என்பது. அஃதொன்றே இறுதியில் தங்கும். எஞ்சியவை ஆவியாய் அழிந்துபோம்; ஆதலால் அதனைத் ‘தங்கம்' என்றனர் என்பர்.

மாலைப் பொழுதில் கதிரோன் காட்சியைக் காணுகிறார் பாவேந்தர்,

66

தங்கத்தை உருக்கிவிட்ட வானோடை தன்னிலே ஓர் செங்கதிர் மாணிக்கத்துச் செழும்பழம் முழுகும் மாலை என்கிறார்.

“தங்கத் தகடு நகர்வதுபோல் - கதிர்.

தானே நகர்வது பார்!”

என்றும்.

“தங்கத்தைக் காய்ச்சி உருக்கிடவே - அங்கே

தனிப்பெரும் கொல்லரும் உள்ளனரோ

எங்கேயும் பார்த்து மகிழ்ந்ததுண்டோ-இந்த

ஏரியைப் போலொரு தங்கவேரி"

என்றும் பாடல்கள் கிளர்ந்தன.

மறையும் கதிரோனைப் பெரும்பாவலர் பாரதியார்.

“பார்; சுடர்ப்பரிதியைச் சூழவே படர் முகில்

எத்தனை தீப்பட் டெரிவன! ஓகோ என்னடி வடிவம்! எத்தனை கலவை! தீயின் குழம்புகள்! செம்பொன் காய்ச்சி