உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

19

விட்ட ஓடைகள்! வெம்மை தோன்றாமே எரிந்திடும் தங்கத் தீவுகள்.”

என்று வண்ணிப்பது கருதத் தக்கது.

பொன், சுடர் இவற்றைப் பற்றி இவண் விரிப்பானேன்? பொன்னுக்கு ஒரு பெயர் காசு; காசுமாலை என்பது பொன்னால் செய்த மாலையே; காசுக் கடை என்பது பொற் கடையே; அல்லது தங்கக் கடையே!

கிளி வேப்பம் பழத்தைச் சிவந்த அலகால் பற்றுகிறது. அதனை, ஓரழகி, பொற்காசில் நூல் நுழைப்பதற்காகத் தன் சிவந்த விரல்களின் இடையே பற்றியிருப்பதற்கு உவமை காட்டுகிறார் ஒரு புலவர் (குறுந். 67) தங்கத்தால் செய்த பணமே காசு' எனப்பட்டு, அதன் பின்னர்ச் செம்பு முதலியவற்றால் செய்ததற்கும் ஆயிற்று என்பது நாணய வரலாற்றுச் செய்தி.

‘காசு’ பொன், பொலம் எனவும் வழங்கும்; பொன்னில் இருந்து 'பொற்பு' 'அழகு' என்பவை யுண்டாம். காசு ஆகிய பொன்னின் பொலிவு உலகறிந்த செய்தி. அப்பொன் ‘தகத்தக' எனப் பளிச்சிடுதல் புலவர்களைக் கவர்ந்தது போலவே பொது மக்களையும் கவர்ந்தமையால் ஏற்பட்டதே அட்டகாசம்!

‘அட்ட காசு' சுடுபான் - சுடர்ப்பொன் - தகத்தக என ஒளிவிடும் அழகு 'அட்டகாசம்'; காசு+அம்=காசம்! இதனொடு ஓர் ஒட்டைச் சேர்த்துப் ‘பிரகாசம்’ (ப்ரகாசம்) என்றார் பிறர். இப்படியும் உண்டா?

தேம் தேஎம் என்பவை தேயமாகி, தேசமாகி விளங்குதல் தெரிந்ததன்றோ?

‘காயம்’ என்னும் தொல் பழந்தமிழ்ச் சொல் ‘ஆ' என்பதை ஒட்டி ஆகாயமாய் வேற்றுச் சொல்லாகிச் செந்தமிழ்ச் சொல்லை வீழ்த்தி விடவில்லையா?

அட்டகாசம்

சுடர்ப்பொன்! சுடச்சுடரும் சுடர்ப் பொன்! வள்ளுவர் அரைக் குறள், பொதுமக்கள் பார்வையில் அட்டகாசமாக இருக்கிறது என்பது இதனால் விளங்கும்.