உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. அடை

அடை' என்னும் சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. அடை என்பதன் வழியாக வந்த சொற்களும் பலவாம்.

6

எனப்

அடை என்பதற்கு இலை என்பது ஒரு பொருள். அஃது எப்படி வந்தது? ஒரு மரத்தில் அல்லது செடி கொடிகளில் மிகுதியும் நிரம்பி அல்லது அடர்ந்து இருப்பது எது? இலையே யன்றோ! அதனால் அடுத்தடுத்து நெருங்கியிருக்கும் இலை, அல்லது அடைசலாக மூடியிருக்கும் இலை, 'அை பட்டது. அடகு கு' எனினும் இலையேயாம். ‘அடகென்று இட ட்டார்” என்பது ஒளவையார் உரை. அடையுள் ஓர் இலைக்குத் தனிச்சிறப்பு உண்டு; மங்கலத் தன்மையும் அதற்குத் தரப் படுவதுண்டு. அது 'வெள்ளடை' எனப்படும் ‘வெற்றிலை'.

-

66

இளந்தளிர், வெளுப்பு நிறமாக இருத்தலால் 'வெள்ளடை' எனப்படுவதாயிற்று. அதற்கு வெற்றிலைப் பெயர் எப்படி வந்தது. பூவாத காயாத இலை, வெற்று லை தானே! இனி, வெறுமனே அவியாமல், காயப்போடாமல், கடைதல் இல்லாமல் விரும்பித் தின்னும் இலையாக இருப்பதாலும் வெற்றிலை ஆயிற்று. தின்னும் இலையாக இருப்பதாலும் வெற்றிலை ஆயிற்று. வெறுமை இலை வெற்றிலை; சிறுமை இலை சிற்றிலை என்பது போல.

வெற்றிதரும் இலை வெற்றிலை என்பது உண்டே எனின், அது வலிந்து பொருத்திக் கூறுதலாம்.

அடையாகிய வெற்றிலையை மட்டுமா மெல்லுகின்றனர்? அதனோடு பாக்கும் சேர்க்கப்படுகின்றது. அப்பாக்குக்கு ஒரு பெயர் ‘அடைக்காய்' என்பது. ‘அடைக்காய்' எனின் அடையும் அதனோடு சேர்க்கும் காயும் எனப் பொருளாம். 'அடைக்காய்’ எனின் பாக்கு என்றாம்.

முற்காலத்தில் பருஞ்

சல்வர்கள், சிற்றரசர்கள் ஆகியோர்க்கு வெற்றிலை மடித்துத் தருவதற்கு ஏவலாள்கள் வைத்திருந்தனர். அவர்களுக்கு ‘அடைப்பைக்காரர்’ என்பது பெயர் அடைப்பை ‘வெற்றிலைப் பை’