உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

21

மடைத் தொழில் (சமையல் தொழில்) வல்லார்களைப் பணியாளர்களாகச் செல்வர்கள் அமர்த்தியிருந்தது போலவே, அடைப்பைக்காரர்களையும் அமர்த்தியிருந்தனர். அவர்கள், வகையில் சுவையும் L மணமும் மிக்க வெற்றிலைச் சுருள்கள் சுருள்கள் அமைத்துத்தந்தனர்; இடித்துப் பதப்படுத்தியும் தந்தனர்.

நினைவூட்டத்தக்க

அை

செல்வச் செழிப்பின் அடையாளமாகவும் மகிழ்வுக் குறியாகவும் மங்கலக் குறியாகவும் வெற்றிலை ஆயதால் அதனை வைக்கும் பெட்டி வெள்ளியாலும் பொன்னாலும் வேலைப்பாடு மிக்கதாகச் செய்யப்படுவதாயிற்று. அதற்கு; வெற்றிலைச் செல்வம்’ செல்லப் பெட்டி (செல்வப் பெட்டி) என்னும் வழக்கும் உண்டாயிற்று.

66

'தமனிய அடைப்பை” என்பதற்குப் பொன்னாற் செய்த வெற்றிலைப் பெட்டி என்றார் அரும்பத உரைகாரர் சிலப். (14.128). “சீர்கொளச் செய்த செம்பொன் அடைப்பை “என்றும்” எரிமணி அடைப்பை', என்றும் சிந்தாமணி கூறிற்று. (1303, 2140). அரசர் சுற்றங்களுள் ஒன்றாக, ‘அடைப்பைச் சுற்றத்”தைச் சுட்டிற்று பெருங்கதை (1. 38. 161).

அடகு என்பதற்கு 'இலை' என்னும் பொருளுண்மையை அறிந்தோம். இந்நாளில் பல இடங்களில் ‘அடகுக் கடை' எனப் பலகைகள் தொங்கக் காண்கிறோம்? அவை கீரைக் கடைகளா? நன்றாகப் படித்தவர்கள் தாம், அக்கடைகளை வைத்துள்ளார்கள்! கீரைக் கடை இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும்; அங்கு வாடிக்கை வைத்திருப்பவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் அடகுக் கடையாகத்தான் இருக்கிறது. பிழை என்று தெரிந்த வர்களாவது திருத்தி எழுதக் கூடாதோ? அதைப் பார்த்தாவது மற்றவர்கள் எழுதுவார்களே!

நம் பொருள் ஒன்றை ஒப்படைத்து, ஒப்படைக்கப் பட்டவரிடமிருந்து நமக்கு வேண்டும் பொருளை வாங்கிக் கொள்வது ‘அடைவு' ஆகும். அதனைச் செய்யும் கடைகள் அடைவுக் கடைகள்’ தாமே!

தங்கம் வெள்ளி முதலிய பொருள்களை வைத்துப் பணம் வாங்குவது ‘அடைவு' என்றால், நிலத்தை வைத்துப் பணம் வாங்குவது அடைமானம்' ஆகும். நிலத்தைப் பாடுபட்டு வ்வளவு தரவேண்டும் என ஒப்பந்தம் செய்து கொள்வது ஒப்படை” எனப்படும்.