உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ்வளம்

15

ஒரு வண்டியை அசையாமல் நிறுத்த வேண்டும். அதற்கு ‘அடை’ வைப்பர். சக்கரத்தின் முன்னும் பின்னும் நெருக்கமாக அடுத்துக் கொடுப்பதே அடை. அது முன்னடை பின்னடை என்று இரண்டாகச் சொல்லவும் படும்.

வண்டிக்குக் கல்லும் கட்டையும் அடை என்றால், சொல்லுக்கும் அடை வேண்டாவா? தாமரையை வெண்டாமரை, செந்தாமரை என்று அடை தந்து சொன்னால், அதன் வகை விளக்கமாகின்றதே! 'செங்கோல் நாரை' 'நனைசுவர்க்கூரை’ 'மூவரியணில்'. 'கோடுவாழ் குரங்கு' என்று அடைமொழிகள் தந்தால் பொருள் விளக்கமும் நடைநயமும் அமைதல் விளங்கும். வ்வளவு தானா அடை!

அடை என்பது நெருக்கம் செறிவு அடுத்திருத்தல் என்னும் பொருள்களுக்கு உரிமையானதால் 'காடு' அடவி' எனப் பட்டது, ‘அடர்காடு’ ‘அடர்த்தியான காடு' என்பன அடவிப் பொருள் விளக்குவன. ‘இருங்காடு’ ‘கருங்காடு என்பனவும் அது.

ஒரு

‘அடவியார்' என்பதொரு குடிப்பிரிவு; அப்பிரிவினர், காலத்துக் குறிஞ்சி நில வாணராக இருந்தனர் என்பதற்குரிய சான்று அது,

நில புலங்களில் பயிர் நிரம்பியிருந்தால் பயிர் ‘அடைசி’லாகக் கிடக்கிறது என்பதும், களை நிரம்பியிருந்தால் களை அடைச’லாகக் கிடக்கிறது என்பதும் உழவடைச் சொற்கள். உழவுத் தொழிலை அடுத்துத் தோன்றிய சொல் ‘உழவடை’ச் சொல்தானே!

‘அடை’யின் சுவையை அறியார் எவர்? அடைத் தோசையை விரும்பார் எவர்? அதற்கு அடை என எப்படிப் பெயர் வந்தது?

6

பருப்பு வகை, தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை, ஞ்சி முதலிய பலவும் சேர்த்து ஆக்கப்படுவதுதானே அடை. அது ஒரு காலத்தில் பெரும்பாலும், கீரை வகைகளை ஆட்டிப் பருப்பு முதலியவற்றுடன் கலந்து ஆக்கியமையால் வந்த பெயர் என்பதை வெளியிடுகிறது.பல பொருள்கள் செறிந்தும் அமைந்தது. அன்றியும் அத்தோசை, மாத்தோசையிலும் கனமானதும் கூட.

இலையடையாக இருந்த அடை, முட்டை யடையாகவும் மாலைக் கடைகளில் சாலை வழியெல்லாம் இடம் பெறலாயிற்றே. அவ்வடை தேநீர்க் கடைகளிலெல்லாம் கூட இடம் பிடித்துக் கொண்டதே. அதிலும் மற்றைச் சுவைப் பொருள்கள் பல இடம்பிடித்துக் கொள்கின்றமை உண்பார் அறியாரா?