உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

23

உடைப்பு' எடுத்தால் அடுத்து ‘அடைப்பு’ உண்டன்றோ! அடை என்பது ஏவலாயிற்றே! மண், மணல், கல், இலை, தழை முதலியவற்றைச் செறித்து வைப்பது அடைப்பு. அணை என்பது அடைப்புச் செய்கைதானே! அண்ணுதல் நெருங்குதல், அடுத்தல். அண்ணுதல் அணை; அடுத்தல் அடை. குழந்தை புரண்டுவிடாமல் இருப்பதற்குத் தாய் என்ன செய்கிறாள்? அணையடை’ துணியால் அமைக்கிறாள்.

உடைப்பு அடைப்பு மட்டும் தானா அடைப்பு! இப் பொழுது அடைப்புப் பெருகிவருதல் கண்கூடு, மாரடைப்பு, மூக்கடைப்பு, முன்னும் பின்னும் அடைப்பு இப்படி எத்தனை அடைப்புகள்?

ஆடுமாடுகளுக்கு ‘அடைப்பான்' நோய் உண்மையை எவர் அறியார்? கடையடைப்புகள், கதவடைப்புகள் ஆகியவை செய்தித் தாள் சரக்காயினவே! ‘அடையா நெடுங்கதவு’ தமிழன் பண்பாட்டுச் சான்று என்பது இன்று நடை முறையாமா? 'கடை திறப்பு’ப் பாடாமலே கதவு திறந்து, 'தோலிருக்கச் சுளை விழுங்கியது' போல நிகழும் நிகழ்ச்சிகள் தமிழ் மண்ணிலும் கூடத் தவழலாயினவே!

சுமக்கும் பாரத்திற்கும் தலைக்கும் இடையே அச்சுமை நேரே தலையில் அழுத்தாமல் இருக்கத் துணியைச் சுருட்டி வட்டமாக்கிச் 'சுமையடை’ வைப்பதும் வழக்கம்! சுமையும் அடையும் புரிகின்றன; சுமையடையும் தெளிவாகின்றது! ஆனால் ‘சும்மாடு' இது என்ன புதுவகை மாடா? அறியாமை உணராமை - போற்றாமை - என்பவை 'சும்மாட்டை’ மட்டும் தானா தரும்? எத்தனை எத்தனையோ மாட்டையும் தரும்!

முட்டையிடுதற்குக் கோழி கத்துதல் (கேறுதல்) அடைக்கத்து எனப்படும். அக்கோழி முட்டையிட்டு அடை காக்கப் பருவம் வந்ததை அதன்மொழியால் கூறுதலே கேறுதல். அதனை உணர்ந்து அடை கட்டி வைக்கத் தவறினால், நம் வீட்டிலே தின்றும் குடித்தும், அடுத்த வீட்டிலே முட்டையிட்டுவிட்டு வந்துவிடும்.

‘அடை’ என்பது என்ன? கோழி குஞ்சு பொரிப்பதற்காக வைக்கப்படும் மண் ஓடு. அதில் உமியைப் பரப்பி வைத்து விட்டால் அதிலேயே முட்டையிடும்; அங்கேயே படுத்துக் கொள்ளும். தீனி தண்ணீர் கருதாமல் பல நாள்கள் அடைந்தே கிடப்பதற்குரிய இருப்பை ‘அடை’ என்பது சரிதானே! காட்டுப்