உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ்வளம் 15

பறவைகள் தானே ‘ஈனில்' இழைத்துக் கொண்டால், வீட்டுப் பறவையாம் கோழிக்கு நாமே ‘அடை’ வைக்கிறோம்! தாய்மைக் கோயில் அவ்வடை அன்றோ! அடை இவ்வளவுதானா?

ஊர்விட்டு ஊர் போனார் விலைமதிப்பு மிக்க தம் பொருள்களைத் தக்காரிடம் பாதுகாக்கச் சொல்வது பழவழக்கு. அவ்வழக்கில் இருந்து வந்ததே ‘அடைகலம் என்பது. கலம் அணிகலம், உண்கலம், படைக்கலம் ஆகிய இன்னவை.

இவ்வழக்கே நம்பிக்கையுடையவர்களிடம் மனைவி மக்கள் முதலியவர்களை அடைக்கலமாக வைக்கும் நிலைமைக்கு வளர்ந்தது. இப்பொழுது ‘அடைக்கலம்' இன்னும் விரிந்து விட்டது. நாட்டுக்கு நாடே அடைக்கலமாகப் போய்க் கொண்டுள்ளதை வரலாறு காட்டிக் கொண்டுள்ளது.

குருவிகளுள் ஒன்று அடைக்கலாங் குருவி. அது, குடிசை, கூரை, முகடு, பலகணி ஆகியவற்றில் தங்கியிருப்பது. அது அடைக்கலமாக வந்து தங்கியிருப்பதால் அதற்குக் கேடு சூழக் குடிசைவாணர் எண்ணவும் செய்யார். அடைக்கல எண்ணப் பேறு அது.

அடையாளம் காணவே ஒரு துறையென்ன வகைவகைத் துறைகள் உள்ளன. தலை இப்படி: முகம் இப்படி; மச்சம் தழும்பு ப்படி இப்படி; அமைப்பு, சூழல் இப்படி இப்படி; என ருவரை அல்லது ஒன்றை அடைந்துள்ள குறிகளைக் கண்டு தெளிவதே அடையாளம் ஆகும்.

அடையாளம் ஒத்திருத்தலால் 'பழியோரிடம் பாவ மோரிடம்' என மாறி விடுவதும் புதுமையில்லை. குற்ற வழக்கில் அடையாளம் படுத்தும்பாடு தனித் தொன்மமாம்' (புராணமாம்).

ஒரு சொல்லுக்கு முன்னே அடுத்து நிற்கும் ஒட்டுச்சொல் 'அடைமொழி' எனப்படுவதும், கடலை அடையும் ஆற்றுப் பகுதி' ‘அடையாறு' எனப்படுவதும், கலப்பை மண்வெட்டி குத்துக்கம்பி ஆகியவற்றை ஒட்டிய மண் அடைமண்' எனப் படுவதும், கதிரோன் மறையும் பொழுது 'அடைபொழுது' எனப்படுவதும், ஆடுமாடு மேய்ச்சல் புலம் சென்று மீள் பொழுது ‘ஒட்டி அடையும் பொழுது' எனப்படுவதும், அடைத்துக் கொண்டு பெய்யும் மழை ‘அடைமழை' எனப்படுவதும், வண்டி, தேர் முதலியவற்றை நிலையில் நிறுத்தி வைக்க உருளைகளின்