உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் தமிழ் வளம்

முன்னே போடப்படும் கல். முண்டு ஆகியவை

25

அடைகல்’

‘அடைமுண்டு' எனப்படுவதும். இலக்கணத்தில் ‘அடையடுத்த கருவியாகு பெயர்; அடைசினை முதல்' எனப்படுவனவும் அடையியல் விளக்கும் ஆட்சிகள்.

ஒருவரை அடைந்து' நெருங்கி இருப்பவர் நட்பர். அவ்வாறு அடையார் நட்பரல்லர். அவர் அடையார்' ச்சொற்களுக்குப் பகைவர் என்பது பொருள்.

அடையலர்'

ஊரை அடைதல், அலுவலகத்தை அடைதல் என அடைதல், சேர்தல் பொருளில் வரும். 'அடையல் குருகே அடையலெங்கானல்' என்பது சிலம்பு. அடையல், அடையாதே என்னும் பொருளது.

தோழி தலைவியைத் தலைவனிடம் ஒப்படைத்து நன்கு பேணிக் காக்குமாறு சொல்லிவிடுப்பது களவியல் காட்சி. அது கையடை’ எனவும் ஓம்படை எனவும்படும். தயரதன் கோசி கனிடம் இராமனை ஒப்படைக்கும் கதைப் பகுதிக்குக் ‘கையடைப் படலம்' என்பது பெயர். இது கம்பராமாயணச் செய்தி.

‘வாயடை’ என்பது சோறு; ‘வளியடை’ என்பது கதவு. முன்னது, நாளுக்கு மூவேளை என்பது கட்டாயமா என்பார் சிலர். ஒரு வேளைக்கும் என் செய்வோம் எனத் தவிப்பார் பலர். பின்னது, வீடிருந்தால் - சொந்தவீடு என்றால் என்ன வாடகை வீடு என்றால் என்ன - கட்டாயம் உண்டு. ஆனால் கோணிச் சாக்கும் ஓலைக்கீற்றும் கூட 'வளியடை' யாக யாக இருத்தல் கண்

கூடு. வளி - காற்று.

முகடு கூரை ஆகியவற்றை ஒட்டி அடைவது ‘ஒட்டடை அதனைப் போக்க ‘ஒட்டடைக்கம்பு' ஆக்குதலும் விற்றலும் தொழிலாகவும் வணிகமாகவும் நடைபெறுகின்றன. செய்வாரே கூவிக் கூவித் தெருவில் விற்றுத் திரிவதும் உண்டு. ஆனால், வழங்குவது எப்படி? ஒட்டடையா? இல்லை! ஒட்டறை! ஒட்டடைக் கம்பா? இல்லை! ஒட்டறைக் கம்பு!

முள் மரங்களுள் ஒன்று ‘ஒட்டடை”. அது குடையெனத் தோன்றுவது. கப்பும் கிளையும் மிக ஒட்டி நெருங்கி கூடெனத் தோன்றுவதால் 'ஒட்டடை என்றனர். பூச்சிகளுக்கு அம் முள்ளும் செறிவும் வாய்ப்பாக இருத்தலால் வலை பின்னி ஒட்டடைக் காட்சியாகவே விளங்கும் 'நூலாம்படை' என்பது மாறவில்லை. ஒட்டடை மாறி ஒட்டறை மரமாகச் சொல்லப்