உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

15 இளங்குமரனார் தமிழ்வளம்

படுகின்றது. 'ஒட்டறங்காடாம் உடங்காடாம்" எனக் கட்ட பொம்பன் நாடகப் பாட்டிலும் ஒட்டறை ஒட்டிக் கொண்டது.

கொல்லர் உலைக் களம் ‘பட்டறை' எனப்படுகிறது. அது தச்சுப்பட்டறை முதலாகப் பல ‘பட்டறை’களைக் க் குறிப்பதாகின்றன! பட்டறைகள் பெருகியும் வருகின்றன. அது பெருகும் அளவு, பிழையும் பெருகிக் கொண்டே உள்ளன.

காயவைத்த இரும்பை வைத்து அடிக்க ஓர் உலைக்கல் உண்டு. அவ்வுலைக் கல்லைப் பட்டு அடைவது ‘பட்ட டை அவ்வுலைக்கல் கொண்டு நடத்தப்படும் தொழில் ‘பட்டடை’, அப்பட்டடை ‘பட்டறை’ யாகிப் பேராட்சி நடத்துகின்றது.

“சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு”

என்பது திருக்குறள்.

கூடாத பண்புடையவர்; ஆனால் கூடியிருக்கிறார் ஏன்? நேரம் வருமளவும் பார்த்திருக்கிறார்; அவர் நட்பு நன்றாகச் சப்பளிக்க அடிக்கத் துணையாம் பட்டடை போன்றதாம்” என்பது இக்குறளின் பொருள்.

"பட்டடை நட்பைப் பரிமேலழகர் விளக்குகிறார்: எறியும் எல்லை வாராமுன் எல்லாம் தாங்குவது போன்றிருந்து வந்துழி. அற எறிவிப்பதாய பட்டடைக்கும் அத்தன்மைத்தாய நட்பிற்கும் தொழிலொப்புமை உண்மையான் அது பற்றி அந்நட்பினைப் பட்டடையாக உபசரித்தார்” என்பது அது.

றன

பட்டறை வைத்திருப்பவர் படியாதவரா? பட்டறிவு இல்லாதவரா? உடையவர் தாம்! உணர்வும் உடையவர் என்றால் பிழையொன்று தெரிந்த பின்னராவது ‘பட்டடை மாற்றலாமே! அவரைக் கண்டு பலர் மாறுதற்கு அவர் ஆசிரியர் ஆவாரே. அஃதோர் அரிய வாய்ப்புத் தானே!.

என