உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. ‘அந்தோ’

என

அந்தோ' என்னும் சொல் 'ஐயோ' என்னும் பொருளது. தொல்காப்பியத்தில் அந்தோ என்பது ‘அந் தீற்று ஓ வழங்கப்பெறுகிறது. அந்தோ என்பது பழந்தமிழ் இலக்கியங்கள் முதல், இக்கால இயல் வழக்குவரை இயன்று வருகின்றது.

உணர்வு வெளிப்பாட்டில் வெளிப்படும். சொற்களுள் ஒன்று அந்தோ ஆகும்.

66

“அந்தோ’ அளியேன் வந்தனென் மன்ற”

(புறம். 238)

“அந்தோ எந்தை அடையாப் போரில்”

(புறம். 261)

“அந்தோ தானே அளியள் தாயே

நொந்தழி அவலமோ டென்னா குவள்கொல்”

(நற். 324)

“உயங்கி னாளென் றுகாதிர்மற் றந்தோ

மயங்கி னாளென்று மருள்திர் கலங்கன்மின்

(கலித். 143)

என்பவையெல்லாம் உணர்வு தட்டி யெழுப்பிய உருக்கத்தில் வெளிப்பட்டவை என்பது வெளிப்படை.

அந்தோ என்னும் இவ்வுணர்வு வெளிப்பாட்டுச் சொல் ஏனை உணர்வு வெளிப்பாட்டுச் சொற்களோடு ஒப்பு, நோக்கத் தக்கதாம்.

அம்மை, அன்னை, ஆத்தாள், அப்பன், அச்சன், அத்தன் ஐயன், அக்கை, அண்ணன் என்பனவெல்லாம் முறைப்பெயர்கள் இவையெல்லாம் அம்மா, அன்னா, ஆத்தா, அப்பா, அச்சா, அத்தா, ஐயா, அக்கா, அண்ணா என விளிவடிவில் அமையவும் பெற்றன. அன்றியும் பல்வேறு உணர்வு வெளிப்பாட்டுச் ச் சொற்களாகவும் இயல்கின்றன.

அம்மை - அம்ம, அம்மே, அம்மோ,

அம்மம்ம, அம்மம்மா, அம்மம்மே, அம்மம்மோ,

அம்மனாய், அம்மனே, அம்மனோ, அம்மையே,