உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

29

முறைப்பெயரழிவால் அதன் வழிப்பட்ட உணர்வுச் சொற்கள் கிளைத்திலவாம்.

அந்தை என்பதை நிறையெனவும் (தொல். தொகை 28 நச்.) ஒரு ‘காலணி' எனவும் (மதுரைத் தமிழ்ச் சங்க அகராதி கண்ட அறிஞர் உலகம்) அந்தையை ஒரு முறைப் பெயராகக் காண வில்லை.

-

அந்தீற்று ஓ (அந்தோ) ‘அன்னீற்று ஓ' (அன்னோ) என்பவற்றை இடையியலில் தொல்காப்பியர் கூறுகிறார். அன் என்பது ‘அன்னை' என்னும் முறைப் பெயரடியாகத் தோன்றியது போல, அந்தென்பது ‘அந்தை’ என்னும் முறைப்பெயரடியாகத் தோன்றியிருக்க வேண்டும் எனக் குறிப்பாக அறியலாம். அந்தை முறைப் பெயர், தந்தையாய் (தம் - அந்தை) விளங்குவது தகும் என்பதை மற்றை முறைப் பெயர்கள் தெளிவிக்கின்றன.

முறைப்பெயர்கள் ‘தம்' என்னும் உரிமைப் பொருட் சொல் தொடர வெளிப்படையாகவும், ஒருசார் குறிப்பாகவும் அமைந்துள்,

ஆய்(தம்- ஆய்) தாய் அப்பன் (தம் - அப்பன்) தமப்பன்

(தகப்பன்)

ஐயன் (தம் - ஐயன்) தமையன்

அக்கை (தம் - அக்கை) தமக்கை

அங்கை (தம் - அங்கை) தங்கை

இவற்றைப் போலவே தம்பின், (தம்பி) என்பதையும் காண்க. இவ்வுரிமைப் பொருள் இணைப்பொடு

அந்தை (தம் - அந்தை) தந்தை

என்றமைதலைக் காண்க. அந்துவன் செள்ளை, அந்துவன் வேண்மாள், நல்லந்துவன், அந்துவஞ் சேரல் என்னும் பண்டைப் பெயர்களையும் எண்ணுக.

அந்தை என்னும் பெயருடன் ‘தம்’ என்னும் உரிமை ஒட்டி ஒட்டியதால் தந்தை அமைந்தது எனக் கொண்டால், பண்டைப் பெருமக்கள் சிலரின் பெயர்ப்புணர்ப்புச் சிக்கல் அவிழ்க்கப் பெறுதல் கண்கூடாம்.

சாத்தந்தை, கொற்றந்தை, கீரந்தை, எயினந்தை ஆந்தை, பூந்தை என்னும் பெயர்கள் முறையே சாத்தன் தந்தை ‘சாத்