உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ்வளம்

15

தந்தை' கொற்றன் தந்தை 'கொற்றந்தை' என்பன போல மருவியதாகக் கூறுதல் ஒழிந்து, சாத்தன் அந்தை ‘சாத்தந்தை’ கொற்றன் அந்தை ‘கொற்றந்தை' என்பன போலப் புணர்ப் புற்றதாகக் கூறத்தகும். முன்னதன் புணர்ச்சி முறையிற் பின்னதன் புணர்ப்பு இயல்பும் எளிது, மாதல் விளங்கும்.

அறிஞர்கள் ஆய்வார்களாக. இவ்வாய்வு, மேலும் சில ஆய்வுக்கு ஏந்தாக அமையும் என்பதை உணர்வார்களாக!