உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ்வளம்

15

66

'அவல்எறி உலக்கை”

“பாசவல் இடித்த பைங்காழ் உலக்கை’

"பாசவல் இடிக்கும் இருங்காழ் உலக்கை

பழம்பண்டமாம்

அவல் இந்நாளிலும்

(பெரும் 226; பதிற்.29)

(குறுந். 2 8)

(அகம். 141.)

வழக்கில்

இருப்பதைத் தெருத் தெருவாகக் கூவி விற்கும் பொருளாக இருப்பதுடன்,

66

66

அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்தது போல" அவலை முக்கித் தின்னு; எள்ளை நக்கித் தின்னு”

என்பன போன்ற பழமொழிகள் வழக்கில் உண்மையும் தெளி விக்கும்.

அவல் ஆக்குவதற்குரிய தவசம் தக்க பக்குவத்தோடு இருக்க வேண்டும் என்பதை முன்னோர் தெளிவாகக் கொண்டு அத்தகையவற்றையே பயன்படுத்தினர் என்பது,

6

“தோரை அவற்பதம் கொண்டன'

எனவரும் மலைபடுகடாத்தால் (121) விளங்கும். தோரையாவது நெல். அது மூங்கிலில் விளைவது.

தினையரிசியால் அவல் செய்யப் பெற்றதையும், அவ்வரிசித் தேர்ச்சியையும், அதன் அழகையும் அருமையான உவமையால் விளக்குகிறது பொருநராற்றுப்படை.

66

ஆய்தினை அரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரலுளர் நரம்பு”

என்பது அது. "தேர்ந்துகொண்ட தினையை இடித்த அவையல் போல (குற்றல் அரிசி போல) குற்ற மற்ற விரலால் வருடும் யாழ் நரம்பு” என்கிறது. இதில் குற்றலரிசி அவையல்' எனப்பெறுவது நோக்கத் தக்கது. குற்றாத அரிசியை ‘அவையா அரிசி' என்கிறது பெரும்பாண் (279).

‘அவைத்தல்' என்பது இடித்தல் பொருள் தருதலையும், அவைத்த அரிசியின் சிறப்பையும்,

66

"அவைப்பு மாண் அரிசி”

“இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்ந்த

அவைப்புமாண் அரிசி”

(அகம் 394)

(சிறுபாண் 194-5)