உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் சொல்

“சுவைக்கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்”

என்பவற்றால் தெளிக.

33

(புறம். 215)

என்பது

அவைக்கப் பெற்ற ஒன்றை 'அவையல்' பொருத்தமேயன்றோ! அவிக்கப் பெற்றதும், இடிக்கப் பெற்றதும், துவைக்கப்பெற்றதும், பொரிக்கப் பெற்றதும், வறுக்கப் பெற்றதும் முறையே அவியல், இடியல், துவையல், பொரியல் என்று வழங்குவன போல அவைக்கப்பெற்றது ‘அவையல்' என அமைந்ததாம்!

அவையல் அவைத்தல் என்பன குற்றிய அரிசியைப் பொதுவாகக் குறித்தலால், அதனைப் பொதுப்பொருளில் அரிசிக்குக் கொள்ளாமல் ஒரு சிற்றுணர்வுக்குக் கொண்டது பொருந்துமோ எனின், பொருந்தும். என் எனின், அவைத்த நிலையில் உண்ணப் பெறுவது அதுவே ஆகலின். ஏனை அரிசியோ பின்னர்ச் சமைத்து உண்ணப் பெறுவது ஆகலின், அடிசில், அவிழ்து, சோறு, சமையல், வாக்கல் முதலாகப் பல பெயர்களைப் பெறும்.

இனி அவையல் என்பது எப்படி அவலாகியது? துவைத்தலால் அமைந்த ‘துவையல்’ ‘துவயல்' என ஐகாரம் கெட்டு அகரமாகி வழங்குவதில்லையா! அதுபோல் ‘அவையல்’ அவய’லாய்ப் பின்னர் யகரமும் கட்டு, அவ’லாய் வழங்கலாயிற்றாம். சங்கச் சான்றோர் நாளிலேயே, ‘அவையல் ‘அவயல்' என்பவை அருகி அவல் என்பதே பெருகி வழங்கிற்று எனின் ‘அவல்' என்பதன் தொல்பழைமை காண்டல் எல்லைக்கு உட்பட்டதாமோ?

சங்க நாளில் ‘அவல்' என்பதற்குப் ‘பள்ளம்' என்னும் ஒரு பொருள் பெருக்கமாக வழங்கியது. "அவலா கொன்றோ மிசையா கொன்றோ” என்றார் ஔவையார். குண்டு குழி, பள்ளம் கேணி இன்னவையும் பிறவும் அவலாகக் குறிக்கப் பெறக் காரணம் என்ன? இந்த உணவு அவலுக்கும், இ அவலுக்கும் உள்ள இயைபு என்ன? இயைபு ஒன்றேதான்; அது தொழில் யைபே என்க?

அவலெறி உலக்கை இருந்தது போலவே, நிலனகழ்தற்குக் குந்தாலி முதலிய கருவிகள் இருந்தன. அவற்றைக் கொண்டு நிலத்தைக் குற்றிக் கேணியும் கிணறும் தோண்டினர்; பாறையைத் தகர்த்தனர்; பரல்களைப் பெயர்த்தனர்; வயல் வளம் அமைத்தனர்.