உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இளங்குமரனார் தமிழ்வளம் 15

ஆகலின் அவைத்தலால் (இடித்தலால், குற்றலால்) அமைந்த நிலம் அவையலாய் அவலாய்ப் பெயர் பெற்றதாம்! இதன் தொன்மையும், அவல் தொன்மையே.

“பரலவல போழ்வில்”

“பரலவல் படுநீர்”

“அவல் தொறும் தேரை தெவிட்ட'

(மலை. 198)

(குறுந். 250)

(ஐங். 453)

இனி அவலம் என்பதன் மூலக்கூறும் அவலில் அமைந் துள்ளதை அறிந்து மகிழலாம்! தாக்கலும் இடித்தலும் இல்லையேல் ‘அவலம்' இல்லையே! ‘ அவல என்னாள் அவலித்து இழிதலின்' என்னும் இளங்கோவடிகள் கூர்ப்பு (கட். 186) இம் மூலங்கண்டுரைத்த முத்திரையே யன்றோ!