உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

8. ஆமை

“அகம் மனம் மனையே பாவம் அகலிடம் உள்ளுமாமே"

என்பது சூடாமணி நிகண்டு.

அகப்

அகம் என்னும் சொல்லுக்கு ‘உள்' என்றும் ‘மனம்’ என்றும், 'மனை’ என்றும் பொருள்கள் உண்மையால் அப் பொருள்களையெல்லாம் தன்னகத்துக் கொண்ட காண் பொருளுக்கும் ‘அகம்’ என்பது குறியாயிற்று. தமிழ் என்பதன் தனிப்பொருள் அகப்பொருள் எனின் அதன் சிறப்பு நன்கு விளங்கும்.

அகம், மனையாம் வீட்டைக் குறித்தலால் மனையாட்சி யுடைய அகத்தாள் ஆகிய தாய் ‘ஆத்தாள்” எனப்பட்டாள். ஆத்தாளுக்கு அரிசியிடலைச் சுட்டுவார் பட்டினத்தார். ஆத்தாளையும், ஆத்தாளின் மூத்தாளையும், ஆத்தாளுக்கு ஆத்தாளையும் ஒருங்கு சுட்டுவார் காளமுகிற் புலவர். ஆத்தாள் என்பது எப்படி அமைந்தது? ‘அகம் அத்து ஆள் என்னும் முச்சொற் கூட்டே ஆத்தாள் என அமைந்ததாம். இனி, அகத்துக் காரி ஆத்துக்காரி என்றும், அகத்துக்காரன் ஆத்துக்காரன் என்றும் வழங்குதல் அறிந்ததே. அகத்திற்கு என்பதும் மற்ற வற்றைப் போலவே ஆத்துக்கு என வழங்குகின்றதாம்.

மனைவியை அகத்து அடியாள் (அகத்தடியாள்) எனக் குறிக்கும் “ஆவீன மழைபொழிய" எனத் தொடங்கும் தனிப் பாடல். 'அகம்' அகமெனவே நிற்கிறது அப்பாட்டில். முன்னைச் சுட்டியவற்றில் அகம் ‘ஆம்' என நின்றது. கலத்துள் இருக்கும் பொருளை அல்லது அகத்து இருக்கும் பொருளை அள்ளி எடுக்க உதவும் கருவி அகப்பை. உடலினுள் இருக்கும் பை போன்ற குடலை அகப்பை என்பதும் இலக்கிய வழக்கு. மனத்தையே பேயாக உருவகிப்பவர் ‘அகப்பேய்' என்றனர். அதனை முன்னிலைப்படுத்திப் பாடிய சித்தர் ஒருவர் அகப் பேய்ச்சித்தர் எனப்படுதல் நாடறிந்தது.