உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ்வளம்

15

டம்

காவற்காடு, அகழ், மதில் என்பவை ஒன்றனுள் ஒன்றாக அமைந்தவை. இம்மூன்றனுள் ‘அகப்பா' என்பதோர் இருந்தது. அது மதிலினுள் மேடை எனப்பட்டது. மற்றை மூன்றையும் தகர்த்தாலும் தகர்த்தற்கு அருமையுடையது அகப்பா என்பதாம். அதனை எறிந்த சேரவேந்தன் அகப்பா எறிந்த’வனாகச் சீராட்டப்படுகிறான்.

66

'கடிமிளைக் குண்டு கிடங்கின் நெடுமதில் நிரைப்பதணத்(து)

அண்ணலம் பெருங்கோட்டகப்பா எறிந்த

பொன்புனை உழிஞை வெல்போர்க் குட்டுவ"

என்பது அது (பதிற்றுப்பத்து, (22). இக்குட்டுவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்பான்

வெற்றிலைக் கொடிக்கால்களின் ஊடுபயிராக இடப் படுவதும் வெற்றிலைக் கொடி படர்வதற்குப் பந்தலாக வாய்ப்பதும் அகத்தி மரமாம். உள்ளகத்தது ஆதலால் அகத்தி என்க. “அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்தி தான் என்னும் பழமொழி அகத்திக்கும் அகத்துக்கு வந்த மருகிக்கும் இரட்டுறலாம் (சிலேடையாம்)

அகப்பு அல்லது அகைப்பு என்பது ஊடு துளைத்துச் செல்லும் கூர்நுனையமைந்த இரும்பு அல்லது மரமுளையாம், அதனையே ஆப்பு என வழங்குகின்றோம். அகப்பு என்பதற்கு ஆழம், தாழ்வு, உட்செலல் என்னும் பொருள்கள் உண்மை அறியின் தெளிவாம்.

இனி ‘ஆகும்' என்று ஏற்றுக் கொள்ளும் சொல்லை ஆம்’ என்பதும், ‘ஆம் ஆம்’ என அடுக்குவதும் வேறு; அகம்’, ‘ஆம்’ என வருவது வேறு என அறிதல் வேண்டும். ஆகும் என்பது இடை டைக்குறையாய் அல்லது தொகுத்தலாய் ‘ஆம்' என வருகின்றது. அகம் என்பதிலுள்ள இரு குறில்களும் ஒரு நெடிலாய் மாறி ஒற்றோடு இயைந்து 'ஆம்' என வருகின்றதாம். இவை இவற்றின் வேறுபாடு என்க.

அகழ், ஆழ்; அகல், ஆல்; பகல், பால்; பகுதி, பாதி என ருவனவற்றை அறிந்தால் ‘அகம்' ‘ஆம்' என இருகுறில் ஒரு நெடிலாகி ஒற்றொடு கூடிவருதல் விதி விளக்கமாம். வி

இம்முறையால் ‘அகம்’ ‘ஆம்’ ‘ஆகி, ‘ஐ’ என்பதுடன் சேர ஆமை' என வருதல் வியப்பில்லை. ஆனால், அதனை அவ்வாறு