உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

37

பொருளுணர்ந்து பெயரிட்ட முன்னோர்களின் பொருளுணர் தேர்ச்சித் திறம் நினைதோறும் நினைதோறும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கு உரியதாய் விளங்குகின்றதாம்.

ஆமைக்கு ‘உறுப்படக்கி' என்றும் 'ஒடுங்கி' என்றும் பெயர்கள் உண்டு. கால்கள் நான்கு, தலை ஒன்று ஆக ஐந்து உறுப்புகளையும் தன் ஓர் ஓட்டுக்குள் ஒடுக்கிக் கொள்வதால் ‘உறுப்படக்கி' எனப்பட்டதாம். அவ்வைந்து உறுப்புகளையும் ஓட்டுள் டுள் ஒடுக்கிக்கொள்வதால் 'ஒடுங்கி' என்னும் பெயர் வாய்த்ததாம். உலகையெல்லாம் தன்னுள் ஒடுக்கிக் கொள்ளும் இறையை 'ஒடுங்கி' என்ற மெய்கண்டார் இவண் எண்ணத் தக்கார். பல்வேறு துறவோர் ஒடுக்க நிலையங்களும் எண்ணத் தக்கனவாம். அவற்றுக்கு ‘ஒடுக்கம்' என்பது பெயராக விளங்குதல் கருதத் தக்கதாம்.

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து

என்றார் திருவள்ளுவர். (126).

66

99

ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி”

என்றார் திருமூலர். (திருமந்திரம். 133)

66

ஐவகைப் பொறியும் வாட்டி ஆமையின் அடங்கி' என்றார் திருத்தக்க தேவர். (சீவக சிந்தாமணி. 2824)

66

ஆமை தன் உறுப்பை உள்ளிழுத்தல் ‘சுரித்தல்' எனப்படும். ஆமை தலைபுடை சுரிப்ப" என்றார் கம்பர். (பால. 63) உறுப்புகளை அகத்தே சுருக்கிக் கொள்ளும் உயிரியை அகமையை) ஆமை என்று பெயரிட்ட அருமை பாராட்டும் பான்மையதாம்.