உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. ஆய்தம்

ஆய்தம் என்பது ஓர் எழுத்து. ஆயுதம் என்பது கருவி. ஆய்தமும் ஆயுதமும் வெவ்வேறு சொற்கள்; வெவ்வேறு பொருள் தருவன. ஆனால் இரண்டையும் வேறுபாடு இல்லாமல் எழுதும் வழக்கம், தொடக்கக் கல்வியாளரிடத்தேயன்றி வளர்ந்தோரிடம் கூட உள்ளது. ஆய்தத்தை ஆயுதமாகவும் எழுதுவது அன்றி, இரண்டையும் ஊன்றியுள்ளது.

ஆயுதம்' என்று எழுதுவதும் வழக்கில்

‘ஆய்தம்' பழந்தமிழ்ச்சொல்; ஆய்த இறுதி, ஆய்தத் தொடர், ஆய்தப்புள்ளி, ஆய்தப்பெயர், ஆய்தபகரம், ஆய்தம் என்பன தொல்காப்பியத்தில் பயில வழங்குவன. ‘ஆயுதம்’ என்பதோ வடசொல்; சங்க நூல்களிலும் சங்கஞ் சார்ந்த நூல்களிலும் வாராத சொல். பிற்காலத்துப் புகுந்து, பெருக்கமாக வழங்கப் பெறும் சொல். சான்று ஆயுத பூசை’.

பழங்காலத்தில் போர்க்கருவிகள் ‘படைக்கலங்கள்' எனப் பெற்றன. படைக்கருவிகள் வைக்கப்பெற்ற இடங்கள் 'படைக் கலக்கொட்டில்கள்' எனப்பெற்றன. 'படை’ என்னும் சொல் படையையும் படைக்கலத்தையும் குறித்தது. பின்னாளில் படையும், படைக்கலமும், ‘ஆயுதம்’ ஆயின. படைக்கலக் கொட்டில்கள் ஆயுதசாலை' ஆயிற்று; படைக்கல வழிபாடு. 'ஆயுத பூசை யாயிற்று; வேற்கோட்டமே ‘படைவீடு' என்பதையும் அறிக.

அறியார்

ஆயுத ஆய்த' வேறுபாடு வேறுபாடு அறியாமல் எழுதினர் என விடலாம். அறிந்தவர்களும் ஏன் அப்படி எழுதினர்?

ஆய்த எழுத்தின் வடிவத்தை ‘முப்பாற்புள்ளி' என்றார் தொல்காப்பியர் ‘ஆய்தப் புள்ளி' என்றும் சுட்டினார் (423) முப்புள்ளி வடிவை விளக்கக், 'கேடயம்' (மெய்ம்மறை) என்னும் கருவியை உவமை காட்டினர் சிலர். கேடயத்தில் மூன்று வட்டங்கள் உண்டு. ஆகலின், வடிவ உவமைகூற அது வாய்ப்பாக இருந்தது! அக் கேடயம் அது போன்ற அமைப்புடைய எழுத்தைக் குறிக்கும் எனக்கொண்டு, கேடயம் ஓர் ஆயுதம்