உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ்வளம்

15

இதழில் வருமுன் பேட்டிச் செய்தியைப் படித்துப் பார்த் திருப்பார்; பார்த்திருக்க வேண்டும். அப்பொழுது பார்க்க வில்லை! எனினும், வெளிவந்த பின்னராவது, ‘ஆய்தம்' என்று திருத்தம் தந்திருக்க வேண்டும்! அவர்தாம் ஆயுதக்காரர் ஆயினரே!

வீரமாமுனிவர் தாம் ஆய்தத்திற்கு மூன்று புள்ளி வடிவு தந்தாரா? வீரமா முனிவர், உரையாசிரியர் நச்சினார்க்கினியருக்கு முந்தியவரா பிந்தியவரா என்பதை நன்கு அறிவார் சத்திய கங்கையார். அவர் (நச்சினார்க்கினியர்) சொல்கிறார்:

66

‘ஆய்தம் என்ற ஓசைதான், அடுப்புக்கூட்டுப்போல மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு, ‘ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்' என்றார். அதனை இக்காலத்தார் நடுவுவாங்கி யிட்டெழுதுப, இதற்கு வரிவடிவு கூறினார்" என்றார்.

ஆய்வுடையார், ஆய்த முப்பாற்புள்ளி வடிவை வீர மாமுனிவர் மேல் ஏற்றுவரோ?

-

இனி ஆய்தம் என்பதன் பொருள் என்ன? ஆசிரியர் னி தொல்காப்பியனரே ஆய்தம் என்பதன் பொருள் ‘உள்ளதன் நுணுக்கம்' என்று கூறியுள்ளார். "ஆய்தல் நுணுகுதல். ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும், உள்ளதன் நுணுக்கம் என்றார் தொல்காப்பியனாரும்” என்றார் சிவ ஞானமுனிவர், (சிவஞானபாடி. 7:3).

தமிழ்மொழியில் வழங்கப் பெறும் எழுத்தொலிகள் எல்லாவற்றிலும் ஆய்தம் நுணுகிய ஒலியுடையது என்பது விளங்க உள்ளதன் நுணுக்கம்' என்றார் ஆசிரியர். ஆய்வு, ஆராய்வு என்பனவும் நுணுக்கப் பொருள் வழிவந்த சொற்களே!

ஆயுதம் “கருவி, கூத்துப்பயிலிடம், படைக்கலம்” என்னும் முப்பொருள்களைத் தர, ஆய்தல் என்பது “ஆராய்தல், காய் முதலியவைகளைப் பிரித்தெடுத்தல், தெரிதல், தரிந் தெடுத்தல், நுண்மை, முன்னுள்ளதனிற் சிறியதாதல், வருந்துதல், அழகமைதல், அசைதல், சோதனை செய்தல், கொண்டாடுதல், கொய்தல், காம்பு களைதல், நுழைந்து பார்த்தல்” என்னும் பதினான்கு பொருள்களைத் தருதல் தமிழ்ச் சொல்லகராதி வழியே அறிக. ஆய்த எழுத்தை மரபும் பொருள் நிலையும் கருதி ‘ஆய்தம்' என்றே எழுதுக! “மரபுநிலை திரியின் பிறிது பிறிதாகும்" என்பது தொல்காப்பியர் துணிவு!