உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ்வளம்

15

ஆய்தல் என்பதும், ஆராய்தல் என்பதும் பழநூல் ஆட்சி யுடையவை. ‘நாடுதல்’ என்பதும் ஆய்தல் பொருளதே. “குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள், மிகைநாடி மிக்ககொளல்” என்பது திருக்குறள். நாடி பார்த்தலும் ஆய்தலே. அதனால், "நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும், வாய்நாடி வாய்ப்பச்செயல்' என்பதும் மருந்தில் இடம் பெற்ற குறளே.

ஆய்தலுக்கும் ஆராய்தலுக்கும் வேறுபாடு உண்டோ. நுண்ணிதாக உண்டு. ‘ஆர்’ என்பது அது. ‘ஆர்’ என்பது அருமை, நுண்மை என்னும் பொருளது. ஆராய்ச்சி, ஆராய்வு என்பவை நுண்ணிய அல்லது கூரிய ஆய்வு என்பதாம்.

ஆய்வுக்கு நுண்மைப் பொருளுண்டோ எனின் அதனைத் தொல்காப்பியனார்க்கு முன்னை இலக்கணரும் கண்டனர் என்பது தெளிவு. தமிழ் எழுத்துக்களில் எல்லாம் நுணுகிய ஒலியுடைய எழுத்தை ‘ஆய்தம்' (ஆய்த எழுத்து) எனக் கண்டதே அதனைத் தெளிவாக்கும். அதனைத் தொல்காப்பியம்,

“ஆய்தம் என்பது உள்ளதன் நுணுக்கம்”

என்று கூறும். உள்ளது - தமிழில் உள்ள எழுத்துக்கள். நுணுக்கம் அவ்வெழுத்துகளிலெல்லாம் நுண்ணிய எழுத்து.

ஒலியளவு குறைந்த எழுத்துகளுக்குப் புள்ளியிட்டு வெளிப் படக் காட்டல் பண்டே வழக்காயிருந்தது. மெய்யெழுத்தின் அளவு அரை மாத்திரை; அதன் உச்சியில் புள்ளி வைத்தல் மரபு.

குற்றியலுகரம், குற்றியலிகரம் என்பவை அரை மாத்திரை அளவின. அவற்றின் மேல் புள்ளி வைத்து மாத்திரைக் குறை வுடையது என வெளிப்படைக் காட்டல் முந்தை வழக்கம்.

மெய்யெழுத்திலும், குற்றியலுகர குற்றியலிகர எழுத்து களிலும் குறைந்த ஒலியுடைய எழுத்து ஆய்தம். அதனால் அதன் வடிவை முற்றிலும் புள்ளியாக அமைத்துக் கொண்டனர். வ அதனை 'முப்பாற்புள்ளி' என்பதும் வழக்கே.

ஆய்தம், “அஃகேனம்’ ‘அஃகன்னா' எனவும் அழைக்கப் படும். ‘அஃகுதல்’ குறைதல். நுணுகுதல் என்னும் பொருள் தரும் சொல். அறிவு, “அஃகி அகன்ற அறிவு” எனத் திருவள்ளுவரால் ஆளப்படும்.

இந்நுணுக்கப் பொருளை அறியாமையாலும் வடமொழி வழிப்படுத்த வேண்டும் என்னும் நினைவாலும் ஆய்தம்