உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் - சொல்

43

என்பதற்குக் 'கேடயம்' (மெய்ம்மறை) என்னும் பொருண்மை கொண்டு, அக்கேடயத்தின் வடிவமைப்பில் மூவேட்டை இருப்பது கொண்டு முப்புள்ளி வடிவுக்கு ஒப்பிட்டுக் காட்டுவாராயினர்.

‘ஆய்தம்' வேறு; 'ஆயுதம்' வேறு. இரண்டையும் ஒன்றாக மயங்கி பின்னோரும் கேடயத்தை ஏற்றதுடன் அடுப்புக்கூட்டில் 'முக்கல்' அல்லது முக்குமிழ்' இருத்தல் கொண்டும், அது சமையல் கருவியாக இருத்தல் கொண்டும் அடுப்புக் கூட்டுப் பொருளுக்கும் உடனாக்கிச் சென்றனர். ஆனால், இக் கருத்துகளை யெல்லாம் விலக்கி நுணுக்கப் பொருள் கொள்ளுமாறு ஆய்தம் என்பதற்கு, 'உள்ளதன் நுணுக்கம்' என ஆசிரியர் தொல்காப்பியனார் சொல்லியதே ஆணைச்சொல் எனக்

கொள்ளல் முறைமையாம்.

ஆய்தலைப் பற்றியும் ஆய்தல் வேண்டும் என்பதற்கு ஆய்தமே' சான்று போலும்!