உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. இட்டவி இ

தமிழ்நாட்டு உணவுகளுள் பெருவழக்குடைய ஒன்று இட்டிலி' என்னும் சிற்றுணவு. வீட்டில் மட்டுமின்றி, உணவு விடுதிகளிலும் பெருவழக்குடையதே. போனவுடன், 'இட்டிலி’ இருக்கிறதா என்று கேட்டு வாங்கி, அதனை உண்டு கொண்டிருக்கும் போதே அடுத்த உணவுக்குக் கட்டளை இடுவதே பெருவழக்கு. இவ்வளவு வழக்குடைய பண்டத்தின் பெயரில் சிக்கல், பெருஞ்சிக்கலாகவே உள்ளது!

இட்லி' என்கின்றனர்; இட்லிக்கடை' என்றே கடைப் பெயர் சொல்லவும் படுகிறது. 'இட்லிக்காரி' என்று அழைக்கப் படுபவர்களும் உளர். இவ் ‘விட்லி' மொழியியற்படி சரியானது அன்று. 'இட்டிலி' என்றே வழங்க வேண்டும் என்று தமிழ் கற்றோர் கூறுவர். ‘ட்’ என்னும் வல்லினப் புள்ளியெழுத்தை அடுத்து அதே உயிர்மெய்யெழுத்து வருவதே இலக்கண முறைமை. வட்டம், அட்டளை, பெட்டி, வட்டு என்னும் சொற்களைக் கொண்டு இதனை அறியலாம்.

'இட்லி' என்பது தவறு; இட்டிலி' என்பது சரி; என்றாலும், அச்சொல் பொருளுடை யதாக இல்லை, 'பொருளில்லாத ஒன்று சொல்லாகாது' சால்லாகாது' என்பது தமிழ் லக்கணம்.

இட்டிலியைச் சிலர் 'இட்டலி' என்கின்றனர்; அதுவும் பொருளோடு பொருந்தாததே!

சிலர் இட்டலியை இட்டெலி' என வடிவு திரித்துச் சொல்வதும் உண்டு. அவர்கள் அதனைத் திருந்திய வடிவம் எனக் கருதியே வழங்குகின்றனர்.

கூழுக்கு என்ன செய்வோம்' என்று குலையும் ஏழைச் சிறுமி ஒருத்தி; பாலுக்கு இனிப்புப் போதாது என ஏங்கும் செல்வச் சிறுமி ஒருத்தி. முன்னவளிடம் பின்னவள் வந்து இட்டெலி ஐந்தாறு தின்றேன்” என்றாள், இட்டிலியைக் கேட்டும் அறியாதவள் ஏழைச் சிறுமி. அவள் கண்டு அறிந்ததும்

66