உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம் – சொல்

45

பொந்துகளிலும் திரியும்

டெலி' என்று செல்வச் சிறுமி

வீட்டு இடுக்குகளிலும் சந்து எலிகளையே தான். அதனால் ‘இ கூறியது. அந்த எலிகளைத்தான் போலும் என எண்ணினாள். அதனால்,

66

"இட்டெலி ஐந்தாறு தின்றோம் என்பீர் - நீங்கள்

ஏதும் கருணை இலீரோ? அம்மா!

பட்டினி யாக இறந்திடினும் - நாங்கள்

பாவம் பழிசெய்ய மாட்டோம் அம்மா!

என்றாள். 'இட்டெலி' என்பதை எலியாக எண்ணியதால் அதைத் தின்பது அருளிலாச் செயலாகவும் பழிபாவச் செயலாகவும் கூறினாள். 'செல்வமும் சிறுமையும்' என்னும் தலைப்பில் கவிமணி பாடிய பாடல்களுள் ஒன்று இது. (மலரும் மாலையும் பக். 173) இதனால் 'இ ட்டெலி' எனச் சொல்லும் வழக்கும் தெரிகின்றது.

இ ட்டலி, இட்டிலி, இட்டெலி - இம் மூன்று வடிவங்களும் பொருளொடு பொருந்தவில்லை. அலி, இலி, எலி என்பவை L ாடு ஒட்டவில்லை!

அறிஞர் மு. வ. கதைகளில் 'இட் இட்டளி' என எழுதினார். டு அளிப்பது' என்ற பொருளில் கருதியிருக்கலாம். இடுதல்', மாவை எடுத்து ‘இடுதல்' என்று கொண்டாலும் பொருந்தவில்லை.

இனிச்சிலர் 'இடுதளி' என்பர். கோயிலுக்குத் 'தளி' என்பது பழம் பெயர். மண்ணால் ஆய கோயில் மண்தளி (மட்டளி); கல்லால் ஆய கோயில் கல்தளி (கற்றளி); கல் வெட்டுகளில் அறியவரும் செய்தி இது. இக்கோயில்களில் வழங்கப்படும் உணவு 'தளிகை' (தளுகை) என்பது. சிற்றூர்களில் இந்நாளிலும் ‘தளுகை போடல்’, ‘தளுகை தருதல்' என்னும் வழக்குண்டு. இவற்றைக் கருதியவர் 'இடு' தளி. 'இடும்' 'உணவு' என்னும் பொருளதாகக் கருதுவர்.

ட்டிலி இத்தனை ‘ஈடு' எடுத்தேன் என்பது வழக்கு. ஈடு என்பது தட்டைக் குறிப்பது. இ க் குறிப்பது. இட்டு வேக வைக்கும் தட்டை ஈடு என்பது வழக்கில் இருப்பதால், 'ஈடுதளி' ‘ஈட்டளி' ஆகலாம் என்பாரும் உளர்.

இவையெல்லாம் நெஞ்சில் பதியுமாறு ஒட்டவில்லை என்பது வெளிப்படை.