உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ்வளம்

15

திருப்பதித் திருக்கோயில் கல்வெட்டு ஒன்றில் ‘இட்டவி’ என்னும் சொல் ஆளப்பட்டிருப்பதாகக் கல்வெட்டு அறிஞர் சி. கோவிந்தராசனார் உரைத்தார். 'அவியல்' அறிந்தது தானே! அவிதல்' அறியாததா? 'அவியுணவு' என்பதைத் திருக்குறள் ஆள்கிறது. இட்டவியை ‘அவியல்' என்றே வழங்கும் வழக்கும் உண்டு. இ டு அவிப்பது ‘இட்டவி' என்பது பொருந்துகின்றது! இனித், திருப்பதிக் கல்வெட்டு ஆகியவற்றையும் அறிந்தால் அறிவித்தால் - ஆய்வு முறையாகக் கொள்ளப்படும் அன்றோ! “எவரும் அறிந்த பெருவழக்குடைய ஓர் உணவின் பெயரே, த்தனை வடிவமாற்றம் குழப்பம் ஆகியவற்றை உடையதா?" என ஐயமுண்டாகலாம்! இதில் ஐயமென்ன? அப்படித்தானே இருக்கிறது!

66

-