உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. இரட்டை வடிவம்

யா

'இரட்டை' என்பது இரண்டு. ஒற்றையா இரட்டை என்பது விளையாட்டுகளுள் ஒன்று. இரட்டை மாட்டு வண்டியும் ஒற்றை மாட்டு வண்டியும் கண்கண்டவை. 'இரட்டையர்’ என்பார் பாவுலாக் கொண்டு பளிச்சிட்டமை தமிழறிந்தது.

அசாமிய இரட்டையர், உலகில் அரிய பிறப்பாயினர்.

விலங்கிரட்டையும், இலையிரட்டையும் பூவிரட்டையும் லக்கணர்களால் எடுத்துக் காட்டப்படும் லக்கண உவமைகள். ‘இரட்டு' என்னும் துணி வகை இரட்டை நூலால் நெய்யப்பட்டது. தடித்த துணியை 'இரட்டுப்போல' என்பது

வழக்கு.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடிப்பவன். இரட்டை வேடம் போடுபவன்! அவன் கவடன்! கவடு, கவட்டை என்பன ரு பிரிவுகள். உள்ளொன்று வைத்துப் புறம் பொன்று பேசுதல் ரட்டை நிலை'. இரட்டிப்பாகக் கிடைக்கும் என்னும் பசப்பில் ஏமாந்து இருந்த ஒன்றையும் இழப்பவர் கண்கூடு!

இரட்டை வால், இரட்டை ச் சுழி, இரட்டை ட்டைக் கன்று இன்ன வழக்குகள் பெருக்கமுள்ளவை. இரண்டு இரட்டு என மெல்லினம் வல்லினமாக மாறியவடிவம் இது. இரண்டகம்' இரண்டும் கெட்டான்’ ‘இரண்டும் தெரியாது' என இயல்பாக நிற்பதும் உண்டு.

இரட்டையை இவ்வளவில் நிறுத்தி இரட்டை வடிவுகளில் வழங்கப்படும் சில சொற்களைப் பார்க்கலாம்.

W

கட்டடம், கட்டிடம், கோயில், கோவில், வைகை வையை சிறுவன், சிறியன் - இப்படியெல்லாம் இரண்டு வடிவங்களில் எழுதுவதும், தமிழறிந்தார் கூட, “இரண்டும் சரிதான்” என்பதும் இரண்டினையும் ஆராய்ந்து பாராமல் ஒவ்வொருவரும் தாம் கொண்டதே சரி என்று வலியுறுத்துவதும் நாடறிந்த - ஏடறிந்த - செய்திகள்.