உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ்வளம்

15

சீரம் என்பது சீரைப் பொருளதே. சீரம் அழகுப் பொருள் தருவது போல், சீலமும் அழகுப் பொருள் தரும். சிறப்புப் பொருளும் தரும். ஆதலால், சீரை சீலையாகச் சொல்லப் படுதலே பிழையற்றதாகும். சேலை பிழையுற்ற வடிவமாகும்.

புழுகு புளுகு

இவ்விரண்டு வடிவங்களும் இருவேறு பொருளன. ஒன்றை ஒன்றாக மயங்குவதும் இரண்டும் ஒருபொருளனவே என்பதும் பிழை.

புழுகு என்பது ஒருவகைப் பூனை; நாவிப் பூனை; நாவிப் பிள்ளை என்பதும் அது, கத்தூரிப்பிள்ளை, கத்தூரிப் பூனை என்பது அதுவே. புழுகு என்னும் அதன் வழியாகப் பெறும் பொருள் புழுகு அல்லது புனுகு எனப்படும் மணப் பொருளாகும். “புழுகு மெய்ச் சொக்கர்' என்பது மதுரைச் சொக்கருக்குரிய புகழ் மாலைகளுள் ஒன்று. “புழுகாண்டி' இறைவன் பெயர்.

புழுக்குதலால் அப்புழுகு தந்த பொருளே புழுகு என்பது. புளுகு என்பது பொய்மைப் பொருளது. பொய்யும் புளுகும் என்பது இணைச் சொல், “கெட்டிக்காரன் புளுகும் எட்டு நாள் என்பது பொய்ப் புனைவைக் குறிப்பது வெளிப்படை. கெட்டிக்காரன் புளுகே எட்டுநாள் என்றால், கெட்டித்தனம் இல்லாதவன் புளுகு எத்தனை நாளைக்கு? 'புளுகாண்டி’ என்பது பொய்யனுக்குப் பட்டப்பெயர்.

அக்கரை

அக்கறை

அக்கரை என்பது அ+கரை எனப் பிரிக்கப்பட்டு அந்தக் கரை என்பதைக் குறிக்கும். கடல் கடந்த இடம், “அக்கரைச் சீமை எனப்படும்.

“அக்கரை வங்கி அல்லது அக்கரை வைப்பகமாகும். க்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை” என்பது பழமொழி.

அக் கறை எனப் பிரிக்கப்பட்ட சொல் அந்தக் கறை (அழுக்கு, சாயம்) என்னும் பொருளது. ‘அக்கறை’ என்னும் ஒரு சொல்லாகுமானால் தனியார்வம், தணியாப்பற்றுமை என்னும் பொருளது. கன்னடத்தில் இதன் வடிவம் ‘அக்கறே’ என வழங்குகின்றது. பலப்பல பல்கிக் கிடந்தாலும் அவற்றுள் ஒன்றைத் தெரிந்து தேர்ந்து அதன் மேல் காட்டும் பற்றே அல்லது ஆர்வமே அக்கறை,. அஃகு அறை; அக்கு அறை;

·