உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

51

அக்கறை அஃகுதல் நுணுகுதல், சுருங்குதல், அறை, அறுத்தல். சுருக்கமாக்கிப் பற்றுக் கொள்ளுதலே அக்கறைப் பொருளாகும். அஃகம், அக்கமாதல் மொழியியல் முறை. “அஃகம் சுருக்கேல்” "அக்கமும் காசும் சிக்கெனத் தேடு" என்பவை அவ்விரு வடிவங்களுக்கும் எடுத்துக் காட்டுகள்.

ஊரணி ஊ

ருணி

இவ்விரு சொற்களும் நீர் நிலையைக் குறிப்பனவே எனினும் வேறுபட்டன. ஊர் ஊர் + + அணி = ஊரணி, ஊர்க்கு அணித்தாக இருக்கும் நீர்நிலை. 'ஊர்க்கும் அணித்தே பொய்கை” என்னும் குறுந்தொகை ஊரணிப் பொருளை நன்கு விளக்குகின்றது.

உடை

66

ஊருணி என்பது ஊரவரால் உண்ணப்படும் நீரை யது என்னும் பொருளது. ஊருண்கேணி" என்னும் குறுந்தொகை அச்சொல்லையும் பொருள் பெற விளக்கும். "ஊருணி நீர் நிறைந்தற்றே" என்னும் குறளும், "ஊருணி நீர் நிறையவும்” என்னும் கம்பர் வாக்கும் கற்றோர் அறிந்தன. குடிநீர்ப்பயன் கொள்ளும் குளம் ஒன்றும், குளித்தல் ஆடுமாடு குளிப்பாட்டல், கலங்கழுவுதல், சலவை செய்தல் என்ப வற்றுக்கெனக் - குளம் ஒன்றும் ஆக இரண்டு குளங்கள் ஊரவர் பயன்கருதிப் பண்டே அமைக்கப்பட்டன. இன்றும், செட்டி நாட்டுப் பகுதிகளில் எல்லாம் அவ்விரு வகை நீர்நிலைகளும் இருத்தல் கண்கூடு. ஊரணி, இட அணிமைப் பொருள் நிலையில் நின்றது. ஊருணி உண்ணும் வினை அடிப்படைப் பொருள் நிலையில் நின்றது. ஊரணி வேறு; ஊருணி வேறு; இவற்றை ஒன்றென மயங்குதல் பிழை. தனித்தனிப் பொருட் சிறப்புடையன இவை.