உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

13. இலவசம்

இலவசம் தமிழா?' என்பார் உளர். இலவசம் தமிழே!

66

இலவசம் பெருவழக்குச் சொல். “இலவச வாசக சாலை;' லவச மருத்துவ மனை; இதனை வாங்கினால், இது இலவசம்”; “நான் என்ன இலவசமாகவா கேட்கிறேன்” என்பன, எங்கும் வழங்குவன.

66

-

-

அகராதிகள்

'இலவசம் விலையின்றிப் பெறுவது அல்லது கொடுப்பது. விலையின்றி" என்று லவசமாய் கூறுகின்றன. பொருள் வழக்குச் சரியே. எப்படி இலவசம் இப் பொருளுக்கு இசைந்து வருகின்றது?

இலவசம் என்பதை இலவியம் என்பதும் உண்டு. அது பிழை வழக்கு. ஆதலால் அதனைக் கருத வேண்டியதில்லை. இலவசத்தைக் கருதலாம்.

இலவசம் தமிழ்ச்சொல் அன்று என்று கருதியவர்கள் இலவசப் படிப்பகம்' என்பதைக் ‘காசிலாப் படிப்பகம்’ என்றனர்.

இலவசம் என்பதை ‘ஓசி' என்பாரும் உளர். ‘காசுக்குத்தான் கேட்கிறேன்; ஓசியாகவா கேட்டேன்" என்பதில் அப்பொருள் விளங்கும். 'இனாம்' என வழங்கும் வேற்றுச் சொல்லும் இலவச உரிமைப் பொருட்டதே.

இலவசம் வந்த வகையைக் காண்போம்.

வீடு தேடி வந்த ஒருவர் 'அது தரவில்லை' இது தர வில்லை ‘என்று குறை சொல்வாரானால் அதை விரும்பாத வீட்டுக்காரர், உங்களை நாங்கள் வெற்றிலை வைத்தா அழைத்தோம்?' என்றோ, 'இலை பாக்கு வைத்தா அழைத்தோம்?’ என்றோ இடித்துரைப்பதை அறியாதவர்களா நாம்?

லை பாக்கு வைத்து அழைப்பது விரும்பி வரவேற்பதன் அடையாளம். மங்கல நிகழ்ச்சிகளுக்கு இலைபாக்கு வைத்து அழைக்கப் பெறுதல் கண்கூடு.