உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

53

மங்கல விழாவுக்குச் செல்பவர்கள் சுருள் வைப்பதையும், சுருள் தருவதையும் இன்றும் காணலாமே; சுருள் என்பது என்ன? வெற்றிலையைச் சுருட்டித் தருவதே சுருள்! வெறும் வெற்றிலையா இருக்கும் சுருளில்? ஊடே பணமும் இருக்கும் அன்றோ?

வெற்றிலைச் சுருளில் பணம் வைத்துத் தருதலால் சுருள் என்பது அன்பளிப்புத் தொகையைக் குறிப்பதாக அமைந்தது. உற்றார் உறவினர் பலரும் ஒரே வேளையில் ஓரிடத்தில் கூட மொய்த்துச் செய்வதால் 'மொய்’ என்றொரு பெயரும் வந்தது. ஈ மொய்த்தல். எறும்பு மொய்த்தல் என்னும் வழக்குகள் நடைமுறை தானே! வேறு விழாவே இல்லாமல் 'மொய் விழா' வென்றே ஒரு விழா நடக்கின்றதே.

வெற்றிலை வழங்குதல், வரவேற்பு.

வெற்றிலை வழங்குதல், மங்கலம். வெற்றிலை வழங்குதல், அமைதி.

இவை வெற்றிலைச் சிறப்பு.

வெற்றிலையை இலை லை என்றாலே போதும். விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. இலை பாக்கு என்பது பெரு வழக்கு.

லை ல

கு

வெற்றிலைக்கு அடை என்பதொரு பெயர்; அடைப்பை என்பது வெற்றிலைப் பையைக் குறிக்கும். அடைக்காய் வெற்றிலையோடு போடப்படும் பாக்கு; அடைப்பைக்காரன் முன்னாளில் அரண்மனைகளில் வெற்றிலை மடித்துத் தந்த பணியாளன். என்பது வெற்றிலையைக் குறிப்பது போல் அடை என்பதும் வெற்றிலையைக் குறித்தல் அறிக. மதிக்கத்தக்க பெருமக்களுக்கு இலையில் பணம் வைத்து அன்பளிப்பாக வழங்குதல் நாட்டு வழக்கம். தட்டத்தில் வெற்றிலை வைத்து அதன் மேல் பணம், பழம், உடை முதலியவை வைத்து வழங்குதலும் வழக்கமே. இவை திரும்பப் பெறும் எண்ணத்தில் தரப்படுவன அல்ல. காணிக்கை போல், தெய்வப் படையல் போல் தருவன. ஆதலால் இலைவயமாகத் தந்த அப்பொருள், இலவசமாய், திரும்பப் பெறாத அன்பளிப்புப் பொருளாய் அமைந்தது.

மதிப்பாக அளித்த கொடை வழியே வந்த அச்சொல், பின்னர் இலையில் வைக்காமல் எதிர்நோக்குதல் இன்றிக் கொடுக்கும் எக்கொடையும் குறிப்பதாயிற்று.