உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஈரோடு

ஓடும் இயற்கையுடையது நீர்; அதன் ஓட்டம் ‘நீரோட்டம்’ எனப்படும். நீரோட்டமே குருதியோட்டத்திற்கும், தேரோட்டத் திற்கும் பிற பிற ஓட்டங்களுக்கு மெல்லாம் மூலவோட்டம்!

நீரோட்டம் கண்ணுக்குத் தெரிய, மேலோட்டமாகவும் ஓடும்; கண்ணுக்குத் தெரியா, உள்ளோட்டமாகவும் ஓடும்; எப்படியும் நீரோட்ட இயற்கை, பள்ளம் நோக்கி ஓடுவதேயாம்!

ஓடும் நீர் ஓடி ஓடி, ஒரு வழியை உண்டாக்கும். நீர் ஓடும்.... நிலத்து வழிக்கு என்ன பெயர்? 'ஓடு' என்பதே முதற் பெயர். நீரோடும் நிலத்திற்கு அமைந்த ‘ஓடு' என்னும் பெயர், அதனைச் சார்ந்த ஊர்ப் பெயர்க்கும் சேர்ந்தது.

எரியோடு, வெள்ளோடு, சிற்றோடு, பேரோடு, ஈரோடு என்பன ஊரோடு சேர்ந்த ஓடுகள்.

நீர் ஓடும் நிலவழியும், அதனைச் சார்ந்த ஊரும் மட்டும் ஓடாக அமைந்ததோ? ஓடு விரிந்தது!

ஓடு' ஓர் ஏவலாயிற்று, 'ஓட்டு' என்பதும் ஏவலாயிற்று.

நீர் வழிவதற்காகச் சரிவாகப் போடப்படும் செய் பொ ளுக்கும் ‘ஓடு' என்னும் பெயர் வந்தது. முகடாக இருந்து பாதுகாக்கும் அத்தன்மையைக் கொண்டவையாம், தலையோடு, தேங்காய் ஓடு என்பவற்றுக்கும், அவற்றின் ஒப்புமையால் திருவோட்டுக்கும் பெயராயிற்று! வறை யோட்டுக்கும் வாய்த்தது!

ஓடு' ஓடும் சொல்லோட்டங்கள் விரிந்தன; நெஞ்ச ஓட்டம் போலப் பல்கின.

66

ஓடு', ஐ என்னும் ஈறு பெற்று ‘ஓடை' ஆயிற்று; ஓடு பெற்ற முதற் பொருளையும் ‘ஓடை' பெறலாயிற்று. உப்போடை பாலோடை மயிலோட செம்போடை என்பவை, ஓடைப் பெயர். ஓடைக்கு நான்கு பொருள்களை ஓட விடுகின்றது யாப்பருங்கல விருத்தி (51):