உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ்வளம் 15

66

ஓடையே ஓடையே ஓடையே ஓடையே கூடற் பழனத்தும் கொல்லி மலைமேலும் மாறன் மதகளிற்று வண்பூ நுதல்மேலும்

கோடலங் கொல்லைப் புனத்துங் கொடுங்குழாய்! நாடி உணர்வார்ப் பெறின்

என்பது அது.

கூடற்பழனத்து ஓடை - ஓடைக் கொடி

கொல்லிமலைமேல் ஓடை - மலை வழி

மதகளிற்று நுதல்மேல் ஓடை - யானையின் நெற்றிப்பள்ளம் கொல்லைப் புனத்து ஓடை - நீரோடை,

'வெள்ளம்' என்பது நீர்ப் பெருக்கின் பெயர். ஏன்? வளமாகப் பெய்த மழை நீர் பெருக்கெடுத்து நுங்கும் நுரையுமாக வெண்ணிறத்தோடு வருவதால் அதன் நிறம் கருதி ‘வெள்ளம்’ எனப்பட்டது. வெள்ளி (விண்மீன்) வெள்ளை(கள்), வெள்ளை (சுண்ணாம்பு: சலவை) முதலியவற்றைக் கருதுக. வெள்ளம்,

‘பால்நுரைப் போர்வை போர்த்து'

வருவதாகப், புலமையாளர் சுட்டுவதும் (திருவிளை. திருநாட் 10) கருதுக.

-

வெள்ளம், முதற்கண் புதுநீர்ப் பெருக்கைக் குறிப்பதாகத் தோன்றிப் பின்னர் நீர்ப் பெருக்கைக் குறித்து, அதன் பின் நீரைக்குறிப்பதாக விரித்தது. வெள்ளத்திற்குரிய நீர்ப் பொருளை மலையாளத்தார் சிக்கெனப்பற்றிப் போற்றிக் கொண்டுள்ளனர். நல்லவற்றை எல்லாம் கை விடுதலில் வல்ல நாமோ, வெள்ளத்தின் முதற்பொருளை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை விட்டுவிட்டோம். அம்முதல் வெள்ளத்தை அடித்துக் கொண்டுபோகவும், 'பிரவாகம்' வந்தது! எப்படியோ வெள்ளம் நிலைத்து விட்டது. 'வெள்ளோடு' என்னும் பேரும் ஊரும் மாறாச் சான்றுகளாய் உள்ளன. வெள்ளப் பெருக்கின் போது மட்டும் நீரோடும் ஓடு 'வெள்ளோடு' என்க.

நீருக்கு நிறமில்லை என்பது அறிவியல்! ஆனால் நிலத்தில் பட்ட நீருக்கு நிலத்தின் நிறமே நிறமாய் ஆகிவிடுவது கண்கூடு.

அன்புடைய தலைவன் தலைவியர் நெஞ்சக் கலப்பு, நிலத்தொடும் இயைந்த நீருக்கு ஒப்பாகத் தோன்றியது ஒரு புலவர்க்கு, அவர்,