உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வளம்

சொல்

57

“செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சந் தாம்கலந் தனவே"

(குறுந். 40)

என்றார். அவர் பெயர் இன்னதென அறியாத தமிழகம், அவரை அவர் தம் உவமையாலேயே 'செம்புலப் பெயல் நீரார்' என நிலைபெறுத்திற்று.

“நிலத்தொடு நீரியைந் தன்னார்”

எனத் திருக்குறளும் கூறிற்று. (1323)

நீரின் நிறத்தால் செங்குளம், கருங்குளம் எனக் குளப் பெயர்களும், அவற்றைச் சார்ந்த ஊர்ப்

ஏற்பட்டுள்ளமை ஆங்காங்கு அறியக் கூடியனவே.

போர்க்களத்தில்

-

பெயர்களும்

பெருக்கெடுத்த குருதி வெள்ளம், உடைப்பட்ட முரசத்தின் உள்ளே பாய்ந்து ஓடுவது. செங் குளத்துத் தூம்பின் வழியே நீர் ஓடுவது போன்றது என்கிறது களவழி நாற்பது (4).

செங்குளம் என்பது செந்நிற நீர்ப்பெயரால் பெற்ற பெயர் என்றால், ஓடைப் பெயர் ஒன்று செந்நிற நீர் ஓடுதலால் 'எரியோடு' எனப் பெயர் பெற்றது.

சவ்

எரிவண்ணம் எவ்வண்ணம்? அவ்வண்ணம் செவ் வண்ணம்! ‘எரி எள்ளுவன்ன நிறத்தன்' எவன், அவன்? “சிவன்' எனப்படும் செம்மேனி அம்மான்! 'எரிமலர் இலவம்' ‘எரிமருள் தாமரை’ ‘எரிமருள் வேங்கை’ ‘எரி புரை எறுழம்' எரியவிர் உருவின் செயலை' என்பவையெல்லாம் செவ்வண்ணத்தைக் காட்டுவனவே!

“செவ்வோடு' ‘எரியோடு” என்க.

இனி, ஈரோடு' பற்றி எண்ணலாம்.

இயற்கையை, விடுத்துச் செயற்கைப் புனைவில் தலைப் பட்ட காலம் தொன்மக்காலம்! ‘பல்லிருகாதம் பல்லிடுக்கு முக்காதம்" என்றால் “ஆமாம்! ஆமாம்!' எனத் தலையாட்டும் காலம் தொன்மக்காலம்! (தொன்மம் புராணம்.) அக்கால நிலையில் ஈரோட்டுக்கு அமைந்த புனை கதை:

ஒரு காலத்து, நான் முகன், ஐந்தலையனாக இருந்தானாம். அவன் தலை ஒன்றைச் ச் சிவன் கிள்ளினானாம்; அத் தலையோட்டில் இருந்து குருதி வழிந்து கொண்டிருந்த தாம்!