உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ்வளம்

15

ஒப்பு நோக்குக: பெயர் பேர். பெயர்வை பேர்வை. வியர்வை வெயர்வை வேர்வை.

ஊர் என்பது பொதுப் பெயர். உயர்வான இடத்தில் அமைந்தது என்னும் பொருளது. அதற்கு முன்னாகச் சிறப்புப் பெயர்கள் அமைந்தன. சிறப்புப் பெயர்கள் வேறுபடுத்திக் காட்டுவதற்கு என்க.

(எ-டு) மலையூர், ஆற்றூர், சேற்றூர், நாவலூர். ‘ஊரெனப் படுவது உறையூர்’ என்னும் பழமொழி அவ்வூர்ச் சிறப்பை உணர்த்துவது.

உயிர் வகைகளுள் ஊர்வன என்பவை ஒரு பிரிவின. அவை பள்ளம், குண்டு, குழி, பொந்து, புடை, பொத்தல், வளை, புற்று என்பவற்றுள் இருப்பன. வையனைத்தும் நிலத்தின் மட்டத்தின் கீழே அமைவன: இவற்றினின்று வெளியேற வேண்டுமெனின் உயர்ந்தே வரவேண்டும். ஆகலின் உயர்ந்து வருதல் ஊர்தல் (உயர்தல்) ஆயிற்று; அவற்றைச் செய்வன 'ஊர்வன' என்றும், ‘ஊரி’ என்றும் பெயர் பெற்றன.

காளை, எருமை, குதிரை, ஒட்டகம் முதலியவற்றின் மேலும், உருளைகள் அமைந்த வண்டியின் மேலும் மாந்தன் செலவு மேற்கொண்டான். அந்நிலையில் அவை ‘ஊர்தி’யாயின. ஊர்திவால்வெள் ஏறே”

என இறைவன் ஊர்தியைக் குறிக்கின்றது சங்கப்பாட்டு. “நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்”

பற்றிச் சுட்டுகிறது மற்றொரு பாட்டு.

கால் நடை ஊர்தி, கால் உருள் ஊர்தி என்னும் அளவில் ஊர்தி நின்று விடவில்லை. மண்ணில் ஊர்ந்து பறப்பதாக உள்ள வான ஊர்தியை அறிவோம். ‘வான ஊர்தி' என்னும் சொல் நாம் படைத்துக் கொண்ட புதுச்சொல் அன்று. பழஞ்சொல், புதிதாகக் கண்ட பொறிக்குப்பழம் பெயர் ஒன்றைத் தெரிந்து கொண்ட கலைச் சொல்லாக்கமே அது.

66

'விசும்பின் வலவன் ஏவா வானஊர்தி” என்பதும் சங்கப் பாட்டே. ஆளிருந்து இயக்குதல் இன்றி வானில் இயங்கும் ஊர்தி என்கிறது அது. ஊர்தியில் ஆள் இன்றிக் கீழேயுள்ள நிலையத் தொடர்பால் இயக்கப்படும் இந்நாள் வானவூர்திக்கும் “வலவன் ஏவா வானவூர்தி” எனப் பெயர் தந்துள்ளமை அறிக.