உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 15.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,,

16. “என்ன “என”

உவமை உருபுகளுள் 'என்ன' என்பதும் ஒன்று. அன்ன இன்ன என்பவை ‘அன', ‘இன' ஆவது போல, ‘என்ன' என்பதும் ‘என' என நிற்கும்.

‘என்ன’ என்னும் உவமை உருபு, உலகியல் வழக்கில் ‘என’ என்று நிற்பதைப் பற்றியதே இவ்வாய்வு! ஆனால் ‘என’ என்று வருமிடத்தெல்லாம் உவமை உருபு நிலையில் நிற்பதில்லை. என்று' என்னும் பொருள் பயப்ப நிற்பதே மிகுதி. இஃது அறியத்தக்கதாம். 'போவேன்' எனச் சொன்னான் என்பதில் ‘என' என்பதற்கு என்று என்பது தானே பொருள்! 'என’ என்பது இவ்விரு பொருட்டாயும் வருதலை நுணுகியே அறியக்கூடும்.

“பொக்கென வா!” “பொக்கெனப் போ!" என்பவை நடை முறையில் உள்ளவை.

பொக்கென என்பது விரைவாக என்னும் பொருள் தருதல் வெளிப்படை. ‘பொக்கு' என்பதற்கு விரைவுப் பொருள் எப்படி வந்தது?

உழவடைக்களத்தில் பொலிபோடுங்கால் ‘பொக்கு’ விரைந்து தள்ளிப்போய் விடுதல் கண்கூடு. 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பது பழமொழி, காற்றுள்ள போது தூற்றினால் மணிபிடித்த தவசம் நேர்கீழேவிழும், அரைமணித் தவசம் அதன் வயிறாக விழும்; கருக்காய் அதற்கும் அப்பால் எட்டத்தில் போய் விழும். இவற்றைக் கண்ட பட்டறிவுடைய பொதுமக்களே, “பொக்கென வா” “பொட்டென வா” என்றும் 'பொக்கெனப் போ” “பொட்டெனப் போ” என்றும் வழங்கு வாராயினர். “பொக்கும் பொட்டும் காற்றில் பறப்பதுபோல விரைந்து வா என்பதே பொருளாம், இதனால் பொக்கென, பொட்டென என்பவை 'பொக்குப்போல' பொட்டுப் போல' என்னும் பொருளாதல் அறிக. பொக்கு பொட்டு என்பனவே, ‘பதர்”, ‘பதடி' என வழங்கப்படுவனவாம்.

பட்டென வா; போ என்பவை குறிக்கும் ‘பட்டு' என்பது

என்ன?